டிஜிட்டல் பொது கட்டமைப்பு, செயற்கை நுண்ணறிவு, நிர்வாகத்திற்கான தரவுகள் குறித்து இந்தியா, பிரேசில், தென்னாப்பிரிக்கா ஆகிய 3 நாடுகள் வழங்கிய முக்கூட்டு அறிக்கைக்கு ஜி20 உச்சிமாநாட்டில் வரவேற்பு கிடைத்துள்ளது. ஜி20 அமைப்பில் உள்ள பல்வேறு நாடுகள், விருந்தினர் நாடுகள் மற்றும் சர்வதேச அமைப்புகள் இந்த அறிக்கையை அங்கீகரித்துள்ளன.
உலகளாவிய வளர்ச்சி 3 சதவீதத்திற்கும் சற்று அதிகமாக உள்ளது. இது இந்த நூற்றாண்டின் தொடக்கத்தில் 4 சதவீதமாக இருந்தது. பெருந்தொற்றுக்குப் பின்னர் இது குறைந்தது. அதே நேரத்தில், தொழில்நுட்பம் அதிவேகத்தில் வளர்ந்து வருகிறது. மேலும் சமமாக பயன்படுத்தப்பட்டால், வளர்ச்சியை அதிகரிப்பதற்கும், சமத்துவமின்மையைக் குறைப்பதற்கும், நிலையான வளர்ச்சி இலக்குகளை அடைவதில் உள்ள இடைவெளியைக் குறைப்பதற்குமான ஒரு வாய்ப்பை வரலாறு நமக்கு வழங்குகிறது.
நிலையான வளர்ச்சி இலக்குகளை நோக்கிய முன்னேற்றத்தை விரைவுபடுத்துவதற்கு உள்ளடக்கிய டிஜிட்டல் மாற்றம் தேவைப்படுகிறது. செயற்கை நுண்ணறிவு மூலம் மேம்படுத்தப்பட்ட நன்கு வடிவமைக்கப்பட்ட டிஜிட்டல் பொது உள்கட்டமைப்பு வளர்ச்சிக்கான தரவுகளைப் பயன்படுத்தவும், புதிய வேலைகளை உருவாக்கவும், சிறந்த சுகாதாரம் மற்றும் கல்வியின் பயன்களை வழங்கவும் முடியும் என்பதை பல ஜி20 நாடுகளின் அனுபவங்கள் நிரூபித்துள்ளன. ஜி20 நாடுகள் இவற்றை ஏற்றுக்கொண்டால், மக்களின் வாழ்க்கையை தீவிரமாக மாற்றியமைக்கும் ஆற்றல் உள்ளது. இது, துடிப்பான ஜனநாயகக் கோட்பாடுகள் மீதான அவர்களின் நம்பிக்கையைப் புதுப்பிக்கிறது. இந்தச் சூழலில், எதிர்காலத்திற்கான ஐநா உச்சிமாநாட்டில் உலகளாவிய டிஜிட்டல் ஒப்பந்தம் ஏற்றுக்கொள்ளப்பட்டதை நாங்கள் நினைவு கூர்கிறோம். 2024-ம் ஆண்டில் எகிப்தின் கெய்ரோவில் நடைபெற்ற உலகளாவிய டிபிஐ உச்சி மாநாட்டையும் நாங்கள் வரவேற்கிறோம்.
தொழில்நுட்ப அமைப்புகள் ஒவ்வொரு குடிமகனின் மீதும் கவனம் செலுத்தி, குடும்பங்கள் மற்றும் சுற்றுப்புறங்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த சிறு மற்றும் பெரிய வணிகங்களை அவர்களுடன் இணைக்க உதவும் போது மட்டுமே வேலை உருவாக்கத்துடன் வளர்ச்சியின் நன்மைகளைத் திறக்க முடியும். இத்தகைய அமைப்புகள் உள்ளடக்கிய, வளர்ச்சி சார்ந்த, பாதுகாப்பான மற்றும் தனிநபர்களின் தனியுரிமையை மதிக்கும் வகையில் வடிவமைக்கப்பட்டபோது இது நிகழ்கிறது. சந்தையில், பொதுவான வடிவமைப்புக் கொள்கைகளைப் பின்பற்றும் அமைப்புகள் ஒன்றோடொன்று இயங்கக்கூடிய மற்றும் அளவிடக் கூடியவையாகும். மின்வணிகம், சுகாதாரம், கல்வி மற்றும் நிதி போன்ற பல்வேறு துறைகளுக்கு சேவை செய்யும் தனியார் துறையை தொழில்நுட்ப அமைப்புடனும் ஒருவருக்கொருவர் இணைக்கவும் இவை உதவுகின்றன. காலப்போக்கில், மக்கள்தொகை பெருகும் போது, தேசிய தேவைகள் மாறும் போது, அமைப்புகள் தடையின்றி மாற்றியமைக்கின்றன.
காலப்போக்கில் தொழில்நுட்பத்தின் தடையற்ற மாற்றத்திற்கு, சந்தை பங்கேற்பாளர்களுக்கு ஒரு நிலையான தளத்தை உருவாக்குவதற்கும், வளர்ச்சிக்கான டிபிஐ, செயற்கை நுண்ணறிவு மற்றும் தரவுகளின் வரிசைப்படுத்தல் போன்ற தொழில்நுட்ப நடுநிலை அணுகுமுறையைப் பின்பற்ற வேண்டும். இந்த அணுகுமுறை அதிக போட்டி மற்றும் புத்தாக்கத்தை ஆதரிப்பதற்கும், பரந்த பொருளாதார வளர்ச்சியைத் தூண்டுவதற்கும் டிஜிட்டல் பொருளாதாரத்தில் சமச்சீரற்ற தன்மையைக் குறைப்பதற்கும் உகந்ததாகும்.
சந்தை பங்கேற்பாளர்களுக்கு அறிவுசார் சொத்துரிமைகள் மற்றும் அவர்களின் ரகசிய தகவல்களின் பாதுகாப்பை வழங்கும் அதே வேளையில், தரவு பாதுகாப்பு மற்றும் மேலாண்மை, தனியுரிமை மற்றும் பாதுகாப்பை நிவர்த்தி செய்ய தரவு நிர்வாகத்திற்கான நியாயமான மற்றும் சமமான கொள்கைகளை நிறுவுவது இந்த வரிசைப்படுத்தலுக்கு முக்கியமானதாகும்.
நம்பிக்கை என்பது பெரும்பாலான செழிப்பான ஜனநாயகங்களின் அஸ்திவாரம் ஆகும்.மேலும் இது தொழில்நுட்ப அமைப்புகளுக்கும் வேறுபட்டதல்ல. இந்த அமைப்புகளில் பொதுமக்களின் நம்பிக்கையை வளர்ப்பதற்கு செயல்பாட்டில் வெளிப்படைத்தன்மை, குடிமக்களின் உரிமைகளை மதிக்க பொருத்தமான பாதுகாப்புகள் மற்றும் அவர்களின் நிர்வாகத்தில் நியாயம் தேவைப்படுகிறது. இந்தக் காரணத்திற்காக, மொழி மற்றும் கலாச்சாரத்தின் பன்முகத்தன்மையை அறிந்திருக்க மாறுபட்ட மற்றும் சரியான பிரதிநிதித்துவ தரவுத் தொகுப்புகளில் பயிற்சி பெற்ற அடித்தள மற்றும் எல்லைப்புற செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் அவசியம், இதனால் அவை உலகெங்கிலும் உள்ள பல்வேறு சமூகங்களுக்கு பயனளிக்கின்றன.
***
(Release ID: 2074832)
TS/PKV/RR
Partnering to leverage the power of technology for a greener world!
— Narendra Modi (@narendramodi) November 19, 2024
The Declaration on Digital Public Infrastructure, AI and Data for Governance offers a roadmap towards a more sustainable planet. I thank the distinguished world leaders for their passion and support to this… pic.twitter.com/uZtMoxJ3wG