பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவின் கனிமவள அமைச்சகத்தின் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும், பிரேசில் நாட்டின் கனிமவளம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் பிரேசில் புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையே கையெழுத்திடப்பட்ட நிலவியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒத்துழைப்புக்கான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் வழங்கப்பட்டது.
இந்தியாவின் கனிமவள அமைச்சகத்தின் இந்திய புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும், பிரேசில் நாட்டின் கனிமவளம் மற்றும் எரிசக்தி அமைச்சகத்தின் பிரேசில் புவியியல் ஆய்வு நிறுவனத்திற்கும் இடையே நிலவியல் மற்றும் கனிமவளத் துறையில் ஒத்துழைப்புக்கான நிறுவன ரீதியிலான வழிமுறைகளை இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் வழங்கும்.