Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா ஜெர்மனிக்கு இடையேயான புரிந்துணர்வு ஒப்பந்தத்திற்கு அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று புதுதில்லியில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஜெர்மனியின் ஸ்டீம்பெஸ் ஜிஎம்பிஹெச் சிஓ. கேஜி நிறுவனத்துடன் மேற்கொள்ளப்பட்ட தொழில்நுட்ப மாற்றத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது. இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் 2016 ஏப்ரல் 25 – ந் தேதி கையெழுத்திடப்பட்டது. ஜெர்மனியில் ஹனோவொர்க் நகரில் நடைபெற்ற 2016 தொழிலியல் கண்காட்சியின் போது இது கையெழுத்தானது.

ஸ்டீம்பெஸ் ஜிஎம்பிஹெச் ஐரோப்பாவில் தொழிலியல் ஆராய்ச்சியில் முன்னணி நிறுவனமாகும். உற்பத்தித் துறையில் அமல்படுத்துவதற்கான திட்டங்களுக்கு தொழிலநுட்ப ஆதார கூட்டாளியாக இந்த நிறுவனம் செயல்படும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கீழ்க்கண்ட துறைகளில் ஒத்துழைப்பு குறிப்பிடப்பட்டுள்ளது.

a) குறிப்பிட்ட தொழில் நுட்பங்கள் குறித்த தொகுப்பு தயாரித்தல்

b) குறிப்பிட்ட மூலதனப் பொருட்கள் துணைப்பிரிவில் தொழில்நுட்ப வரைபடத் திட்டம் தயாரித்தல்

c) மூலதனப் பொருட்கள் தொகுப்புகளில் தொழில்நுட்ப நிலவரத்தை மதிப்பீடு செய்தல்

d) தொழில்நுட்ப நிகழ்வுகளில் ஒத்துழைப்பு

e) தற்போதுள்ள தொழில்நுட்ப நிறுவனங்களை மேம்படுத்துவது / இந்தியாவில் பசுமை நிறுவனங்களை அமைத்துக் கொடுத்தல் மற்றும் இதர தொழில்நுட்பம் சார்ந்த ஒத்துழைப்பு மற்றும் கூட்டமைப்பு.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் இந்திய மூலதன பொருட்கள் துறையினரால் தொழிலியல் தொழில்நுட்பத் திட்டங்கள் அமைப்பதற்கு அடிப்படையாகவும் கருவியாகவும் இருக்கும். இந்தப் புரிந்துணர்வு ஒப்பந்தம் பல்வேறு பொதுத்துறை நிறுவனங்களுக்கு மேடையாக விளங்கும். மூலதனப் பொருட்கள் துறையைப் பொறுத்தவரை தொழில்நுட்ப இடைவெளிகளை நிறைவு செய்ய ஸ்டீம்பெஸ் ஜிஎம்பிஹெச் – ன் திறனையும் நிபுணத்துவத்தையும் பயன்படுத்திக் கொள்ள உதவும்.