Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா செயற்கை நுண்ணறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது, பொது நலனுக்காக அதைப் பயன்படுத்துகிறது: பிரதமர்


செயற்கை நுண்ணறிவில் இந்தியா குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருவதுடன், அதனை பொதுமக்கள் நலனுக்காகப் பயன்படுத்தி வருவதாகவும் பிரதமர் திரு. நரேந்திர மோடி கூறியுள்ளார். இளைஞர் சக்தி மீது நம்பிக்கை வைத்து, உலக மக்கள் இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு அவர் வலியுறுத்தியுள்ளார்.

கூகுள் மற்றும் ஆல்பாபெட்டின் தலைமை நிர்வாக அதிகாரி திரு. சுந்தர் பிச்சையைச் சந்தித்ததில் மகிழ்ச்சி அடைந்த பிரதமர், சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பதிவிட்டுள்ளதாவது:

“சுந்தர் பிச்சை, உங்களைச் சந்தித்ததில் மகிழ்ச்சி. இந்தியா செயற்கை நுண்ணறிவில் குறிப்பிடத்தக்க முன்னேற்றங்களை அடைந்து வருகிறது. பொது நலனுக்காக அதைப் பயன்படுத்தி வருகிறது. நமது இளைஞர் சக்தி மீது நம்பிக்கை வைத்து, உலகம் நம் நாட்டில் முதலீடு செய்ய வருமாறு கேட்டுக்கொள்கிறோம்!”

***

(Release ID: 2102197)
TS/PKV/RR/KR