Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா – சிலி முன்னுரிமை வர்த்தக உடன்பாடு விரிவாக்கம்


இந்தியாவுக்கும் சிலிக்கும் இடையேயான முன்னுரிமை வர்த்தக உடன்பாடு விரிவாக்கத்திற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்தது.

இந்தியா சிலி நாட்டுக்கு பல்வகையான பொருட்களை ஏற்றுமதி செய்கிறது. சிலி வழங்கும் விரிவான பலவகைப்பட்ட வரிச்சலுகைகள் காரணமாக விரிவாக்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக உடன்பாடு இந்தியாவுக்கு பெரிதும் பயனுள்ளதாக இருக்கும். விரிவாக்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தின்படி இந்தியாவுக்கு சிலி 30 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான 1798 வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. தன் பங்கிற்கு இந்தியா சிலிக்கு 10 சதவீதம் முதல் 100 சதவீதம் வரையிலான 1031 வரிச் சலுகைகளை வழங்கியுள்ளது. உத்தேச விரிவாக்கப்பட்ட முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தத்தின் படி சிலிக்கான இந்தியாவின் ஏற்றுமதிகளில் 86 சதவீதம் சலுகைகளுக்கு உட்படுத்தப்படுகிறது. இதனால் அடுத்த சில ஆண்டுகளில் அந்த நாட்டுக்கான இந்தியாவின் ஏற்றுமதி 2 மடங்காக உயரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவுக்கும் சீனாவுக்கும் இடையே முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் 2006 மார்ச் மாதம் கையெழுத்திடப்பட்டது. இது 2007 ஆகஸ்ட் முதல் அமலுக்கு வந்தது. 206-2007 ம் ஆண்டில் இந்தியாவின் ஏற்றுமதி இடங்களில் சிலி 51-வது இடத்திலிருந்தது. அதே ஆண்டில் இருதரப்பு வர்த்தகத்தின் நடவு 230 கோடி அமெரிக்க டாலராக இருந்தது. 2007 செப்டம்பரில் முன்னுரிமை வர்த்தக ஒப்பந்தம் அமலுக்கு வந்தபோது வர்த்தக நிலைமை மாறியது. 2006-2007 இருந்த நிலையில் இருதரப்பு வர்த்தகம் 2014-15 ல் 58.49 சதவீதம் வளர்ச்சி அடைந்தது. வர்த்தகத்தின் அளவு 365 கோடி அமெரிக்க டாலர் அளவாக உயர்ந்தது. இதில் ஏற்றுமதி 57 கோடி அமெரிக்க டாலர். இறக்குமதி 308 கோடி அமெரிக்க டாலர்

இந்தியா சிலி நாட்டுடன் நேசமான உறவினைப் பெற்றுள்ளது. சர்வதேச அமைப்புகளில் சிலி இந்தியாவுக்கு ஒத்துழைப்பு அளித்துவருகிறது. தற்போதைய முன்னுரிமை வர்த்தக ஒப்பந்த விரிவாக்கம் இரு நாடுகளிடையே வர்த்தகப் பொருளாதார உறவுகளை மேம்படுத்தும். இந்த விரிவாக்கம் இந்தியா-சிலி உறவுகளில் முக்கியமான திருப்பமாகும். இதனால் இந்தியாவுக்கும் லத்தீன் அமெரிக்க நாடுகளுக்கும் இடையிலான பாரம்பரிய உறவுகள் வலுப்படுத்தப்படும்.


******