பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியா – கொரியா குடியரசு இடையே பிப்ரவரி 2019ல் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்து எடுத்துரைக்கப்பட்டது.
இந்திய அரசின் தொலைத்தொடர்பு அமைச்சகத்திற்கு உட்பட்ட அஞ்சல் துறையும், கொரிய குடியரசும் இணைந்து, “கொரியாவின் ராணி ஹூ ஹேவாங்-ஓக்” என்ற தலைப்பிலான அஞ்சல் தலை ஒன்றை வெளியிட பரஸ்பரம் ஒப்புக்கொண்டுள்ளன.
இந்த கூட்டு அஞ்சல் தலைகள், 2019 இறுதியில், இருதரப்பும் ஒப்புக்கொள்ளும் தேதியில் வெளியிடப்படும்.