இந்தியா- ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையேயான விரிவான பொருளாதார ஒத்துழைப்பு ஒப்பந்தத்தை இந்திய ஏற்றுமதியாளர்கள் பயன்படுத்திக்கொள்வதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக மத்திய வர்த்தகம் மற்றும் தொழில்துறை அமைச்சர் திரு பியூஷ் கோயலின் பகிர்வை பகிர்ந்து பிரதமர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:
“இது இந்திய நிறுவனங்களுக்கான மிகப்பெரிய அடையாளமாகும். இது இந்தியத் தயாரிப்புகளை உலக அளவில் பிரபலமாக்கும்.”
இவ்வாறு பிரதமர் தமது ட்விட்டர் பதிவில் தெரிவித்துள்ளார்.
***
A great sign for Indian enterprise, it will make Indian products popular globally. https://t.co/21oJAfXDsv
— Narendra Modi (@narendramodi) January 31, 2023