மேதகு அதிபர் டிரம்ப் அவர்களே,
இரு நாடுகளின் பிரதிநிதிகளே,
ஊடக நண்பர்களே,
வணக்கம்!
முதலில், எனது அன்புக்குரிய நண்பர் அதிபர் டிரம்ப்பிற்கு, அன்பான வரவேற்பு மற்றும் விருந்தோம்பலுக்காக எனது மனமார்ந்த நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறேன். அதிபர் டிரம்ப் தமது தலைமையின் மூலம் இந்தியா-அமெரிக்க உறவைப் போற்றி புத்துயிர் அளித்துள்ளார்.
அவரது முதல் பதவிக்காலத்தில் நாங்கள் இணைந்து பணியாற்றிய போது இருந்த உற்சாகம்; இன்றும் அதே அளவில் உள்ளது. அன்று இருந்த உற்சாகம், ஆற்றல் மற்றும் அதே அர்ப்பணிப்பை இன்று நான் உணர்ந்தேன்.
அவரது முதல் பதவிக்காலத்தில் நாம் அடைந்த சாதனைகள் மற்றும் ஆழ்ந்த பரஸ்பர நம்பிக்கை ஆகியவற்றின் திருப்தி பாலமாக இன்றைய விவாதங்கள் இருந்தன. அதே நேரத்தில், புதிய இலக்குகளை அடைவதற்கான உறுதியும் இருந்தது. இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான ஒத்துழைப்பும், கூட்டாண்மையும் ஒரு சிறந்த உலகத்தை வடிவமைக்கும் என்று நாங்கள் நம்புகிறோம்.
நண்பர்களே,
அமெரிக்கர்கள் அதிபர் ட்ரம்ப்பின் குறிக்கோளான “அமெரிக்காவை மீண்டும் சிறந்ததாக்குங்கள்” அல்லது மகா(“MAGA”) பற்றி நன்கு அறிந்திருக்கிறார்கள். ‘வளர்ச்சியடைந்த இந்தியா 2047′ என்ற உறுதியுடன் இந்திய மக்களும் பாரம்பரியம் மற்றும் வளர்ச்சிப் பாதையில் வேகமாக முன்னேறி வருகின்றனர்.
அமெரிக்காவின் மொழியில், வளர்ந்த இந்தியா என்றால் இந்தியாவை மீண்டும் சிறந்ததாக்குங்கள், அதாவது மிகா( “MIGA”) என்று பொருள். அமெரிக்காவும், இந்தியாவும் இணைந்து செயல்படும்போது, அதாவது “MAGA” மற்றும் “MIGA”, இரண்டும் இணையும்போது செழிப்புக்கான “MEGA” கூட்டாண்மை உருவாகிறது. மேலும் இந்த மெகா உணர்வு நமது இலக்குகளுக்கு புதிய பரிமாணத்தையும்,உயர்ந்த நோக்கத்தையும் அளிக்கிறது.
நண்பர்களே,
இன்று, 2030-ம் ஆண்டுக்குள் இருதரப்பு வர்த்தகத்தை 500 பில்லியன் டாலர்களாக இரட்டிப்பாக்க இலக்கு நிர்ணயித்துள்ளோம். பரஸ்பர நன்மை பயக்கும் வர்த்தக ஒப்பந்தத்தை முன்கூட்டியே முடிப்பதில் எங்கள் குழுக்கள் பாடுபடும்.
இந்தியாவின் எரிசக்தி பாதுகாப்பை உறுதி செய்வதற்காக எண்ணெய் மற்றும் எரிவாயு வர்த்தகத்தை வலுப்படுத்துவோம். எரிசக்தி உள்கட்டமைப்பில் முதலீடும் அதிகரிக்கும்.
அணுசக்தித் துறையில், சிறிய உலைகளின் திசையில் ஒத்துழைப்பை அதிகரிப்பது குறித்தும் நாங்கள் பேசினோம்.
நண்பர்களே,
இந்தியாவின் பாதுகாப்புத் தயாரிப்பில் அமெரிக்கா முக்கிய பங்கு வகிக்கிறது. உத்திப்பூர்வ மற்றும் நம்பகமான நண்பர்களாக, கூட்டு மேம்பாடு, கூட்டு உற்பத்தி மற்றும் தொழில்நுட்ப பரிமாற்றம் ஆகிய திசையில் நாங்கள் தீவிரமாக முன்னேறி வருகிறோம்.
வரவிருக்கும் காலத்தில், புதிய தொழில்நுட்பம் மற்றும் உபகரணங்கள் எங்கள் திறனை அதிகரிக்கும். தானியங்கி அமைப்புகளுக்கான தொழில் கூட்டணியைத் தொடங்க நாங்கள் முடிவு செய்துள்ளோம்.
அடுத்த பத்தாண்டுகளுக்கு பாதுகாப்புத்துறை ஒத்துழைப்புக்கான சட்டக வரைவு உருவாக்கப்படும். பாதுகாப்பு செயல்பாடு, தளவாடங்கள், பழுதுபார்ப்பு மற்றும் பராமரிப்பு ஆகியவை அதன் முக்கிய பகுதிகளாக இருக்கும்.
நண்பர்களே,
இருபத்தியோராம் நூற்றாண்டு தொழில்நுட்பத்தால் இயக்கப்படும் நூற்றாண்டாகும். ஜனநாயக மதிப்புகளில் நம்பிக்கை கொண்ட நாடுகளுக்கு இடையே தொழில்நுட்பத் துறையில் நெருக்கமான ஒத்துழைப்பு என்பது முழு மனிதகுலத்திற்கும் புதிய திசை, வலிமை மற்றும் வாய்ப்புகளை அளிக்கும்.
செயற்கை நுண்ணறிவு, குறைக்கடத்திகள், குவாண்ட்டம், உயிரி தொழில்நுட்பம் மற்றும் பிற தொழில்நுட்பங்களில் இந்தியாவும் அமெரிக்காவும் இணைந்து செயல்படும்.
இன்று நாங்கள் உத்திசார் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி உறவை உருமாற்றுதல் என்பதை ஒத்துக் கொண்டுள்ளோம். இதன் கீழ், முக்கியமான கனிமங்கள், அதி நவீன பொருட்கள் மற்றும் மருந்துகளின் வலுவான விநியோகச் சங்கிலிகளை உருவாக்குவதற்கு முக்கியத்துவம் தரப்படும். லித்தியம் மற்றும் அரிய மண் போன்ற கனிமங்களுக்கான மீட்பு மற்றும் செயலாக்க முயற்சியைத் தொடங்கவும் முடிவு செய்யப்பட்டுள்ளது.
விண்வெளித் துறையில் அமெரிக்காவுடன் எங்களுக்கு நெருக்கமான ஒத்துழைப்பு உள்ளது. இஸ்ரோ மற்றும் நாசாவுடன் இணைந்து உருவாக்கப்பட்ட நிசார் செயற்கைக்கோள், விரைவில் இந்திய ஏவுகணை வாகனத்தில் இருந்து விண்வெளிக்குச் செல்லும்.
நண்பர்களே,
இந்தியாவிற்கும் அமெரிக்காவிற்கும் இடையிலான கூட்டாண்மையானது ஜனநாயகம் மற்றும் ஜனநாயக மதிப்புகள், அமைப்புகளை ஆதரிக்கிறது. இந்தோ-பசிபிக் பகுதியில் அமைதி, நிலைத்தன்மை மற்றும் செழிப்பை மேம்படுத்த நாங்கள் ஒன்றிணைந்து செயல்படுவோம். இதில் குவாட் என்ற நால்தரப்பு பாதுகாப்பு பேச்சு வார்த்தை சிறப்புப் பங்கை வகிக்கும்.
இந்த ஆண்டு இந்தியாவில் நடைபெறும் குவாட் உச்சி மாநாட்டில், புதிய பகுதிகளில் கூட்டாண்மை நாடுகளுடன் ஒத்துழைப்பை அதிகரிப்போம். ஐஎம்இசி( “IMEC”) மற்றும் ஐ2யு2( “I2U2”) முன்முயற்சியின் கீழ், பொருளாதார வழித்தடங்கள் மற்றும் இணைப்பு உள்கட்டமைப்பில் நாங்கள் இணைந்து செயல்படுவோம்.
பயங்கரவாதத்திற்கு எதிரான போராட்டத்தில் இந்தியாவும், அமெரிக்காவும் உறுதியாக இணைந்துள்ளன. எல்லை தாண்டிய பயங்கரவாதத்தை ஒழிக்க ஒருங்கிணைந்த நடவடிக்கை அவசியம் என்பதை நாங்கள் ஒப்புக்கொள்கிறோம்.
2008-ம் ஆண்டு இந்தியாவில் படுகொலைகளை நிகழ்த்திய குற்றவாளியை இப்போது இந்தியாவிடம் ஒப்படைக்க அதிபர் முடிவு செய்ததற்கு நான் அவருக்கு நன்றி கூறுகிறேன். இந்திய நீதிமன்றங்கள் இப்போது பொருத்தமான நடவடிக்கை எடுக்கும்.
நண்பர்களே,
அமெரிக்காவில் உள்ள இந்திய சமூகம் எங்கள் உறவில் ஒரு முக்கிய இணைப்பாகும். நமது இருநாட்டு மக்களுக்கு இடையிலான உறவை வலுப்படுத்த, விரைவில் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் பாஸ்டனில் புதிய இந்திய தூதரகங்களைத் திறப்போம்.
இந்தியாவில் கடல் கடந்த கல்வி வளாகங்களைத் திறக்க அமெரிக்க பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்வி நிறுவனங்களை நாங்கள் அழைத்துள்ளோம்.
அதிபர் ட்ரம்ப் அவர்களே,
இந்தியாவுடனான உங்கள் நட்புக்கும் உறுதியான அர்ப்பணிப்புக்கும் நான் நன்றி கூறுகிறேன். 2020 –ம் ஆண்டின் உங்கள் வருகையை இந்திய மக்கள் இன்னும் நினைவில் வைத்திருக்கிறார்கள், மேலும் அதிபர் ட்ரம்ப் மீண்டும் வருவார் என்று நம்புகிறார்கள்.
1.4 பில்லியன் இந்தியர்களின் சார்பாக, உங்களை இந்தியாவுக்கு வருமாறு அழைக்கிறேன்.
மிக்க நன்றி.
பொறுப்பு துறப்பு – இது பிரதமரின் கருத்துக்களின் தோராயமான மொழிபெயர்ப்பு. அசல் கருத்துகள் இந்தியில் வழங்கப்பட்டன.
***
(Release ID: 2103022)
TS/PKV/AG/KR
Addressing the press meet with @POTUS @realDonaldTrump. https://t.co/u9a3p0nTKf
— Narendra Modi (@narendramodi) February 13, 2025
सबसे पहले मैं, मेरे प्रिय मित्र राष्ट्रपति ट्रम्प को मेरे शानदार स्वागत और आतिथ्य सत्कार के लिए हार्दिक आभार व्यक्त करता हूँ।
— PMO India (@PMOIndia) February 13, 2025
राष्ट्रपति ट्रम्प ने भारत और अमेरिका संबंधों को अपने नेतृत्व से संजोया है, जीवंत बनाया है: PM @narendramodi
हम मानते हैं कि भारत और अमेरिका का साथ और सहयोग एक बेहतर विश्व को shape कर सकता है: PM @narendramodi
— PMO India (@PMOIndia) February 13, 2025
अमेरिका की भाषा में कहूं तो विकसित भारत का मतलब Make India Great Again, यानि “मीगा” है।
— PMO India (@PMOIndia) February 13, 2025
जब अमेरिका और भारत साथ मिलकर काम करते हैं, यानि “मागा” प्लस “मीगा”, तब बन जाता है –“मेगा” पार्ट्नर्शिप for prosperity.
और यही मेगा spirit हमारे लक्ष्यों को नया स्केल और scope देती है: PM
अमेरिका के लोग राष्ट्रपति ट्रम्प के मोटो, Make America Great Again, यानि “मागा” से परिचित हैं।
— PMO India (@PMOIndia) February 13, 2025
भारत के लोग भी विरासत और विकास की पटरी पर विकसित भारत 2047 के दृढ़ संकल्प को लेकर तेज गति शक्ति से विकास की ओर अग्रसर हैं: PM @narendramodi
भारत की defence preparedness में अमेरिका की महत्वपूर्ण भूमिका है।
— PMO India (@PMOIndia) February 13, 2025
Strategic और trusted partners के नाते हम joint development, joint production और Transfer of Technology की दिशा में सक्रिय रूप से आगे बढ़ रहे हैं: PM @narendramodi
आज हमने TRUST, यानि Transforming Relationship Utilizing Strategic Technology पर सहमती बनायीं है।
— PMO India (@PMOIndia) February 13, 2025
इसके अंतर्गत critical मिनरल, एडवांस्ड material और फार्मास्यूटिकल की मजबूत सप्लाई chains बनाने पर बल दिया जायेगा: PM @narendramodi
भारत और अमेरिका की साझेदारी लोकतंत्र और लोकतान्त्रिक मूल्यों तथा व्यवस्थाओं को सशक्त बनाती है।
— PMO India (@PMOIndia) February 13, 2025
Indo-Pacific में शांति, स्थिरता और समृद्धि को बढ़ाने के लिए हम मिलकर काम करेंगे।
इसमें Quad की विशेष भूमिका होगी: PM @narendramodi
आतंकवाद के खिलाफ लड़ाई में भारत और अमेरिका दृढ़ता से साथ खड़े रहे हैं।
— PMO India (@PMOIndia) February 13, 2025
हम सहमत हैं कि सीमापार आतंकवाद के उन्मूलन के लिए ठोस कार्रवाई आवश्यक है: PM @narendramodi