Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், அமெரிக்க முதல் பெண்மணியுடன் பிரதமர் பங்கேற்பு

இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், அமெரிக்க முதல் பெண்மணியுடன்  பிரதமர் பங்கேற்பு


இந்தியா- அமெரிக்காவின் எதிர்காலத்திற்கான திறன் சார்ந்த நிகழ்ச்சியில், பிரதமர் திரு நரேந்திர மோடியும், அமெரிக்க முதல் பெண்மணி ஜில் பைடனும்  பங்கேற்றனர். வாஷிங்டனில் உள்ள தேசிய அறிவியல் மையத்தில் நடைபெறும் இந்த நிகழ்ச்சி இந்தியா மற்றும் அமெரிக்காவின் எதிர்கால திறன் மேம்பாட்டில் கவனம் செலுத்துவதை கருத்தில் கொண்டு நடத்தப்பட்டது.  குறிப்பாக உயர்கல்வி நிறுவனங்களில் கல்வியின் தரத்தை மேம்படுத்துவதற்கான பணிகளை முன்நிறுத்தி இந்த நிகழ்ச்சி நடத்தப்பட்டது.  

இந்த நிகழ்ச்சியில் பேசிய  பிரதமர் திரு நரேந்திர மோடி கல்வி திறன் மேம்பாடு மற்றும் புத்தாக்க முயற்சிகளை மேம்படுத்துவதற்காக இந்தியா மேற்கொண்டு வரும் பல்வேறு நடவடிக்கைகளை பட்டியலிட்டார்.  அதே நேரத்தில் இரு நாடுகளுக்கு இடையேயான கல்வி மேம்பாட்டு பரிமாற்றங்கள், இந்திய மற்றும் அமெரிக்க கல்வி நிறுவனங்களின் ஒத்துழைப்பு மற்றும் ஆராய்ச்சி சூழல்களுக்கான பணிகளை  வரவேற்றார்.  குறிப்பாக கல்வி மற்றும் ஆராய்ச்சி துறையில் இந்தியாவும், அமெரிக்காவும் இணைந்து செயல்படுவதற்கான ஐந்து முக்கிய பரிந்துரைகளையும் பிரதமர் மோடி சமர்ப்பித்தார்.  

அவை

  • உயர்கல்வி  துறை, தொழில்துறை,  அரசு ஆகியவற்றை ஒருங்கிணைக்கும் அணுகுமுறை
  • ஆசிரியர்கள் மற்றும் மாணவர்கள் பரிமாற்றத்தை ஊக்குவித்தல்
  • இருநாடுகளுக்கிடையே பல்வேறு பாடப்பிரிவுகள் சார்ந்த ஹேக்கத்தான் நிகழ்ச்சிகளை நடத்துதல்
  • தொழில்திறன்களுக்கான தகுதிகளை பரஸ்பரமாக அங்கீகரித்தல்
  • கல்வி மற்றும் ஆராய்ச்சி சார்ந்த பணிக்காக மக்களின் பயணங்களை ஊக்குவித்தல்

இந்த நிகழ்ச்சியில் வடக்கு வெர்ஜினியா சமூக கல்லூரியின் தலைவர், அமெரிக்க பல்கலைக்கழகங்களுக்கான சங்கத்தின் தலைவர், மைக்ரான் தொழில்நுட்ப நிறுவனத்தின் தலைவர் மற்றும் முதன்மை செயல் அதிகாரி மற்றும் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

***

(Release ID: 1934352)

LK/ES/AG/KRS