Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவைப் பேரிடர்களிலிருந்து மீட்டெழச் செய்வது, உயிரச்சேதத்தைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம்

இந்தியாவைப் பேரிடர்களிலிருந்து மீட்டெழச் செய்வது, உயிரச்சேதத்தைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம்


தேசியப் பேரிடர் மேலாண்மைத் திட்டத்தைப் பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று வெளியிட்டார். நாட்டில் இந்த வகையில் வெளியிடப்படும் முதலாவது திட்டமாகும் இது.

இந்தியாவை பேரிடர்களிலிருந்து மீட்டெழச் செய்வது, உயிர்ச்சேதத்தைக் குறைப்பது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது இத்திட்டம். இந்தத் திட்டம் **செண்டாய் கட்டமைப்பின்** கீழ்கண்ட நான்கு முன்னுரிமைக் கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டது பேரிடர் அபாயத்தைப் புரிந்துக்கொள்ளுதல், பேரிடர் அபாய மேலாண்மையை மேம்படுத்துதல், பேரிடர் அபாயக் குறைப்பு நடவடிக்கைகளில் முதலீடு செய்தல் (கட்டுமானம் மற்றும் கட்டுமானம் சாராத நடவடிக்கைகள் மூலம்) மற்றும் பேரிடரைச் சந்திக்க தயார் நிலையில் இருத்தல், முன்கூட்டி எச்சரிக்கை மற்றும் பேரிடரைத் தொடர்ந்த மேலும் சிறப்பான கட்டுமானங்களைச் செய்தல்.

திட்டத்தின் முக்கியக் கூறுகள்

இந்தத் திட்டம் பேரிடர் மேலாண்மையின் தடுப்பு, குறைப்பு, பதில் நடவடிக்கை மற்றும் மீட்பு ஆகிய அனைத்து கட்டங்களுக்குமானது= சம்பந்தப்பட்ட அரசுத் துறைகள், அமைப்புகள் ஆகியவற்றுக்கு இடையே அனைத்து வகை ஒருங்கிணைப்புக்கும் திட்டம் வழிவகை செய்கிறது. இந்தத் திட்டத்தில் பஞ்சாயத்து மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்பு வரையிலான அனைத்து அரசு அமைப்புகளுக்கும் பங்கு மற்றும் பொறுப்புகளை இத்திட்டம் தெளிவாக வரையறை செய்துள்ளது. இந்த திட்டத்தில் மண்டல அணுகுமுறை கடைப்பிடிக்கப்படுகிறது. இதனால், பேரிடர் மேலாண்மைக்கு மட்டுமன்றி, மேம்பாட்டுத் திட்டமிடலுக்கும் பெரிதும் உதவியாக இருக்கும்.

பேரிடர் மேலாண்மையின் நிர்வாகத்தின் அனைத்துக் கட்டங்களிலும் அளவுகளுக்கு உரிய வகையில் அமல்படுத்தப்படும் விதத்தில் திட்டம் வடிவமைக்கப்பட்டுள்ளது. பெரிய நடவடிக்கைகளான முன்கூட்டிய எச்சரிக்கை தகவல் கிடைக்கச் செய்தல், மருத்துவ வசதி, எரிபொருள், போக்குவரத்து, தேடுதல் மற்றும் மீட்பு, வேறிடங்களுக்கு கொண்டுச் செல்லுதல் போன்ற அனைத்தையும் வரையறை செய்துள்ள இத்திட்டத்தினால் பேரிடர் காலத்தில் நடவடிக்கை மேற்கொள்ளும் அமைப்புகளுக்கு சரிபார்ப்பு பட்டியல் போல இது பயன்படுகிறது. மீட்டெழுச்சிக்கு இத்திட்டம் பொதுவான நெறிமுறைகளை அளிக்கிறது. மேலும், நிலைமையை மதிப்பீடு செய்வதில் நெகிழ்ச்சித் தன்மையை வழங்கி பேரிடருக்குப் பிந்தையக் கட்டுமானங்களை சிறப்பாகச் செய்ய உதவுகிறது.

பேரிடர்களுக்குத் தக மக்களை தயார் செய்வதற்கு கூடுதலான தகவல், கல்வி, தகவல்தொடர்பு செயல்பாடுகளை திட்டம் வலியுறுத்துகிறது.

மத்திய உள்துறை அமைச்சர் திரு ராஜ்நாத் சிங், மத்திய உள்துறை இணையமைச்சர் திரு கிரண் ரிஜிஜூ, பிரதமர் அலுவலகம், உள்துறை அமைச்சகம், தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையம் ஆகியவற்றின் உயர் அதிகாரிகள் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.