Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கு சிங்கப்பூர் பிரதமர் மேற்கொண்ட பயணத்தின்போது ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி வெளியிட்ட செய்தி

இந்தியாவுக்கு சிங்கப்பூர் பிரதமர் மேற்கொண்ட பயணத்தின்போது ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வெளியிட்ட செய்தி

இந்தியாவுக்கு சிங்கப்பூர் பிரதமர் மேற்கொண்ட பயணத்தின்போது ஊடகங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி  வெளியிட்ட செய்தி


மேதகு பிரதமர் லீ சியன் லூங் அவர்களே,

ஊடக செய்தியாளர்களே,

சாலையில் ஓட்டுநர் இல்லாத கார்களை இயக்குவதில் உலகில் முன்னோடியாக சிங்கப்பூர் இருப்பதாக என்னிடம் தெரிவித்தனர். எனினும், நானும், நாம் அனைவரும் உறுதியளிப்பது என்னவென்றால், இந்தியாவின் நலன்விரும்பிகளில் முக்கியமானவர்களில் ஒருவரான பிரதமர் லீ, சிங்கப்பூரை இயக்கும் இருக்கையாக திகழ்கிறார் என்பதுதான். மேலும், நமது இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதை இயக்குபவராகவும் திகழ்கிறார். மேதகு லீ அவர்களே, நீங்கள் இந்தியாவின் நண்பர். நமது உறவை வலுப்படுத்துவதற்காக நீங்கள் அளிக்கும் பங்களிப்பையும், உறுதியையும் நாங்கள் வரவேற்கிறோம். உங்களை இங்கு வரவேற்பது எனக்கு கிடைத்த மிகப்பெரும் கவுரவம்.

நண்பர்களே,

பிரதமராக நான் பதவியேற்றபிறகு, சிங்கப்பூருக்கு நான் துக்க நிகழ்ச்சியில் கலந்துகொள்வதற்காக முதல்முறையாக பயணம் மேற்கொண்டேன். சிங்கப்பூருக்கு மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த ஆசியாவுக்கும் வழிகாட்டியாக திகழ்ந்த லீ குவான் யியூ-வுக்கு மரியாதை செலுத்துவதற்காக சென்றேன். இந்த ஆண்டில் சிங்கப்பூரின் மற்றொரு தலைசிறந்த மகனான முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதன் மறைந்தது எங்களுக்கு வருத்தமளிக்கிறது. இந்தியாவின் நெருங்கிய நண்பராக அவர் இருந்தார். அவருக்கு இந்திய வம்சாவழியினர் விருதை (Pravasi Bharatiya Samman) வழங்கி கவுரவிக்கும் வாய்ப்பைப் பெற்றோம். நாங்கள் அவரை இழந்து தவிக்கிறோம்.

நண்பர்களே,

சிங்கப்பூரின் தேசிய கீதம் மஜுலா சிங்கப்பூரா. அதாவது, முன்னோக்கிய சிங்கப்பூர் ஆகும். தற்போதைய காலத்தில் இருந்தாலும், எதிர்காலத்தின் தேவைக்காக வாழும் ஒரு நாடு உள்ளது என்றால், அது சிங்கப்பூர் தான். எனவே, இந்த தேசிய கீதம் நமக்கு ஆச்சரியம் அளிக்கவில்லை. உற்பத்தி, சுற்றுச்சூழல், புத்தாக்கம், தொழில்நுட்பம், அல்லது பொதுமக்களுக்கு சேவைகளை அளிப்பது என எதிலும் சிங்கப்பூரின் இன்றைய செயல்பாடுகளை, உலகில் உள்ள மற்ற நாடுகள் நாளை செயல்படுத்தும்.

நண்பர்களே,

சுமார் 12 மாதங்களுக்கு முன்னதாக, நான் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டபோது, நமது இருதரப்பு நல்லுறவை பாதுகாப்பு ஒத்துழைப்பு அளவுக்கு மேம்படுத்தினோம். புதுப்பித்த உணர்ச்சி, புதிய சக்தியுடன் இதனை மேற்கொண்டோம். நமது இரு நாட்டு மக்களுக்கும் பயனளிக்கும் வகையில், சிங்கப்பூரின் பலத்தையும், இந்தியாவின் அளவையும் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு நமது நல்லுறவு உள்ளது; மேலும், சிங்கப்பூரின் சக்தியையும், நமது மாநிலங்களின் ஜொலிப்பையும் இணைத்து உள்ளது. கடந்த ஆண்டு நான் மேற்கொண்ட பயணத்தின்போது, ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும் என்ற நமது மிகச்சிறந்த இலக்கை செயல்படுத்துவதற்கான திட்டங்களை வகுத்தோம். நாம் ஒப்புக் கொண்ட முடிவுகளை விரைந்து செயல்படுத்துவது நமது நல்லுறவுக்கு முக்கியமான அம்சமாகும். இன்று மேதகு லீ-யும், நானும் நமது பாதுகாப்பு ஒத்துழைப்பின் அமைப்பு மற்றும் அம்சங்கள் குறித்து விரிவாக ஆய்வுசெய்தோம்.

நான் சிங்கப்பூருக்கு பயணம் மேற்கொண்டபோது, என்னை தொழிற்கல்வி நிறுவனத்துக்கு (Institute for Technical Education) பிரதமர் லீ அழைத்துச் சென்றார். இன்று, திறன் மேம்பாட்டுக்காக பரஸ்பரம் இரண்டு புரிந்துணர்வு ஒப்பந்தங்களில் நாங்கள் கையெழுத்திட்டுள்ளோம். அதில், ஒன்று நமது வடகிழக்கு மாநிலங்களுக்கான திறன் மேம்பாட்டு மையத்தை குவஹாட்டியில் அமைப்பதாகும். மற்றொன்று, தேசிய திறன் மேம்பாட்டு கவுன்சில் அமைப்பதாகும். ராஜஸ்தான் மாநில அரசுடன் ஒருங்கிணைந்து சுற்றுலா பயிற்சிக்கான மையத்தை உதய்ப்பூரில் தொடங்கிவைக்க உள்ளதை நான் வரவேற்கிறேன். நகர்ப்புற வளர்ச்சி மற்றும் கழிவு மேலாண்மை ஆகிய துறைகளிலும் சிங்கப்பூருடன் ராஜஸ்தான் மாநிலம் இணைந்து செயல்பட்டுவருகிறது. ஆந்திரப்பிரதேசத்தின் புதிய தலைநகரான அமராவதியை உருவாக்குவதில் ஏற்கனவே நம்முடன் சிங்கப்பூர் இணைந்து செயல்பட்டு வருகிறது.

நண்பர்களே,

நமது இருதரப்பு நல்லுறவுக்கு அடித்தளமாக வர்த்தகம் மற்றும் முதலீட்டு உறவுகள் திகழ்கின்றன. வர்த்தகர்களுக்கு இடையேயான வலுவான நல்லுறவால் மகிழ்ச்சி அடைந்து வருகிறோம். இந்த சூழ்நிலையில், நமது ஒருங்கிணைந்த பொருளாதார ஒத்துழைப்பு உடன்பாட்டை இரண்டாவது முறையாக மறுஆய்வு செய்யும் பணிகளை விரைவுபடுத்த நானும், பிரதமர் லீ-யும் ஒப்புக் கொண்டோம். அறிவுசார் சொத்துரிமை குறித்து இன்று கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தம் மூலம், வர்த்தக பரிமாற்றங்கள் மற்றும் ஒத்துழைப்பு வலுப்படும். சிங்கப்பூரில் தொழில்நிறுவனங்களுக்கு நிதி திரட்டுவதற்காக ரூபாய் பத்திரங்களை (corporate Rupee bonds) வெளியிடுவதை நானும், பிரதமர் லீ-யும் வரவேற்கிறோம். இது இந்தியாவின் மிகப்பெரும் கட்டமைப்பு வளர்ச்சித் தேவைக்கான நிதியை திரட்டும் நமது முயற்சியின் அடுத்தகட்ட நடவடிக்கையாகும்.

நண்பர்களே,

நமது பாதுகாப்பு நல்லுறவில் ராணுவம் மற்றும் பாதுகாப்பு ஒத்துழைப்பு முக்கியத் தூணாக உள்ளது. கடல்சார் நாடுகள் என்ற அடிப்படையில் இரு நாடுகளும், கடல் வழியை தகவல் தொடர்புக்கு பயன்படுத்துவது, கடல் மற்றும் பெருங்கடல்களில் சர்வதேச சட்ட விதிகளுக்கு மதிப்பளித்து செயல்படுவது ஆகியவற்றில் முக்கியத்தும் அளித்து வருகிறோம். ஆசியான், கிழக்கு ஆசிய மாநாடு மற்றும் ஆசியான் பிராந்திய கட்டமைப்பு ஆகியவற்றில் நமது ஒத்துழைப்பானது, பிராந்திய ஒத்துழைப்புக்கான வெளிப்படையான மற்றும் உள்ளடக்கிய கட்டமைப்பை ஏற்படுத்துவது, நம்பிக்கை மற்றும் நம்பகத்தன்மைக்கான சூழலை ஏற்படுத்துவது ஆகியவற்றை நோக்கமாகக் கொண்டது.

தீவிரவாதத் தாக்குதல்கள், குறிப்பாக எல்லைதாண்டிய தீவிரவாதம் அதிகரிப்பது, பயங்கரவாதம் அதிகரிப்பது ஆகியவை நமது சமூகத்துக்கு மிகப்பெரும் சவால்களாகும். இவை நமது சமூகங்களின் அடிப்படை கட்டமைப்புக்கு அச்சுறுத்தலாக உள்ளது. அமைதி மற்றும் மனிதநேயத்தின் மீது நம்பிக்கை கொண்டிருப்பவர்கள், இந்தக் கொடுமைகளுக்கு எதிராக ஒருங்கிணைந்து செயல்பட வேண்டியது அவசியம் என்பது எனது திடமான நம்பிக்கை. இந்த அச்சுறுத்தல்களை எதிர்கொள்வதற்கு நமது ஒத்துழைப்பை வலுப்படுத்த இன்று நாங்கள் ஒப்புக் கொண்டுள்ளோம். இணையதள பாதுகாப்பிலும் ஒத்துழைப்பை வலுப்படுத்த முடிவுசெய்துள்ளோம்.

மேதகு லீ அவர்களே,

வலுவான பொருளாதார வளர்ச்சி மற்றும் மாற்றமிகு சூழலுக்கான பாதையில் இந்தியா பயணித்துக் கொண்டிருக்கிறது. இந்தப் பயணத்தில், சிங்கப்பூரை முக்கிய கூட்டாளியாக நாங்கள் கருதுகிறோம். அண்மையில், மாற்றமிகு இந்தியா குறித்து துணை பிரதமர் சண்முகரத்தினம் தெரிவித்த யோசனைகளால் நாங்கள் பயனடைந்தோம். உங்களது தனிப்பட்ட நட்பு மற்றும் நமது இருதரப்பு நல்லுறவை வலுப்படுத்துவதில் உங்களது தலைமைப்பண்பு ஆகியவற்றுக்கு நான் மிகுந்த மதிப்பளிக்கிறேன். மீண்டும் ஒரு முறை, உங்களையும், உங்களது குழுவையும் மிகுந்த மகிழ்ச்சியுடன் நான் வரவேற்கிறேன். உங்களது இந்தியப் பயணம் பயனுள்ள வகையிலும், வெற்றிகரமாகவும் அமையும் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

நன்றி,

மிக்க நன்றி.

***