பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கும் (FSSAI) பூடான் உணவு மற்றும் மருந்து ஆணையத்துக்கும் இடையே உணவுப் பாதுகாப்புத் துறையில் ஒத்துழைப்பை ஏற்படுத்துவதற்கான ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்துக்கும் பூடான் உணவு மற்றும் மருந்து ஆணையத்துக்கும் இடையே ஒப்பந்தம் கையெழுத்தாவதன் மூலம், இந்த இரு அண்டை நாடுகளுக்கு இடையே இத்துறையில் எளிதில் வர்த்தகம் நடைபெற வழிவகுக்கும். பூடான் உணவு மற்றும் மருந்து ஆணையம், இந்தியாவுக்கு தயாரிப்புகளை ஏற்றுமதி செய்யும் போது, இந்திய உணவுப் பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தால் பரிந்துரைக்கப்பட்ட தரநிலைகளை உறுதி செய்து அதற்கான சான்றிதழை வழங்கும். இது எளிதாக வர்த்தகம் நடைபெறுவதை ஊக்குவிப்பதுடன், இரு தரப்பிலும் செலவுகளைக் குறைக்கும்.
***********
Release ID: 2014133
AD/PLM/KRS