பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையிலான இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தில் (SSA) “வாழ்ந்துவரும் நாடு” என்ற கோட்பாட்டை சேர்ப்பதற்கான திருத்தத்துக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது.
இந்தியாவுக்கும் நெதர்லாந்துக்கும் இடையில் திருத்தம் செய்யப்பட்ட இந்த ஒப்பந்தம், அறிவிக்கை செய்யப்பட்ட தேதியில் இருந்து மூன்றாவது வாரத்தில் இருந்து செயல்பாட்டுக்கு வரும்போது, இரு நாடுகளுக்கும் இடையிலான உறவுகளை வலுப்படுத்தும். வெளிநாடுகளில் வணிகம் செய்வதன் செலவுகளைக் குறைப்பதன் மூலம் இரு நாடுகளிலும் வெளிநாட்டு செயல்பாடுகளை மேம்படுத்தி லாபம் ஈட்டுதல் மற்றும் போட்டியிடும் தகுதியை இந்திய, நெதர்லாந்து நாட்டு கம்பெனிகளுக்கு தொடர்ந்து சாதகமான விளைவுகளை ஏற்படுத்தும். இரு நாடுகளுக்கும் இடையில் அதிக முதலீடு பரவுதலை ஊக்குவிக்கவும் இந்த ஒப்பந்தம் உதவிகரமாக இருக்கும்.
இந்த ஒப்பந்தம் 2010 ஆம் ஆண்டில் இருந்து செயல்பாட்டில் உள்ளது. இந்தியாவில் இருந்து வெளியேறி நெதர்லாந்தில் பணியாற்றி வருபவர்களுக்கு பலன் கொடுத்துள்ளது.
இந்தியத் தொழிலாளர் நெதர்லாந்தில் இறந்து போக, அவருடைய வாழ்க்கைத் துணைவர் மற்றும் குழந்தைகள் இந்தியாவில் வாழ்ந்து வருதல்
நெதர்லாந்தில் வேலைபார்க்கும் போது உடல் ஊனமுற்று இந்தியாவுக்குத் திரும்பும் இந்தியத் தொழிலாளர்.
புதிய சமூகப் பாதுகாப்பு சட்டம் ஏற்கப்பட்ட பிறகு, இருதரப்பு சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தத்தை திருத்தம் செய்வதற்கு இந்தியா ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று நெதர்லாந்து தரப்பில் கோரிக்கை வந்தது. நெதர்லாந்தின் தேசிய சட்டத்தின்படி அதுபோன்ற திருத்தம் தேவைப்படுகிறது என தெரிவிக்கப்பட்டது.
தற்போதுள்ள சமூகப் பாதுகாப்பு ஒப்பந்தம், மேற்குறிப்பிட்ட மாற்றத்தின் வரையில் திருத்தம் செய்யப்படுகிறது.
பின்னணி
*****