Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி மத்திய அமைச்சரவையில் விளக்கப்பட்டது


இந்தியாவுக்கும் கத்தாருக்கும் இடையே இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுகள் துறையில் ஒத்துழைப்பு குறித்த புரிந்துணர்வு ஒப்பந்தம் பற்றி பிரதமர் திரு.நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவையில் இன்று விளக்கப்பட்டது. ஏப்ரல்-7, 1999 அன்று கையெழுத்தான இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மற்றும் 5-06-2016 அன்று கட்டாருடன் கையெழுத்தான இளைஞர் நலன் விளையாட்டுத் துறை ஒத்துழைப்பு குறித்த முதலாவது செயல்நிலை திட்டமான இருதரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் குறித்தும் அமைச்சரவைக்கு விளக்கப்பட்டது.

இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் விளையாட்டுகள் விஞ்ஞானம், விளையாட்டு மருத்துவம், பயிற்சி தொழில்நுட்பம் ஆகியவற்றில் அறிவு மற்றும் நிபுணத்துவத்தை விரிவாக்க உதவும்.

இதனையடுத்து நமது விளையாட்டு வீரர்கள் சர்வதேச போட்டிகளில் சிறப்பாக செயல்படுவது சாத்தியமாகும். மேலும் இந்தியாவிற்கும் கட்டாருக்கும் இடையே இருதரப்பு உறவுகளை இது வலுப்படுத்தும். அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் அவர்களது சாதி, சமய, இன மண்டல, பாலின, வேறுபாடுகளின்றி இந்த ஒப்பந்தம் பயன்படும்.