Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவுக்கும் ஃபிஜிக்கும் இடையிலான விமான சேவை ஒப்பந்தத்தில் கையெழுத்திட மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் மோடி தலைமையில் கூடிய மத்திய அமைச்சரவை இந்தியாவுக்கும் ஃபிஜி தீவுக்கும் இடையிலான புதிய விமானசேவை ஒப்பந்தத்தில் (ASA) கையெழுத்திட ஒப்புதல் அளித்துள்ளது.

1974, ஜனவரி 28ஆம் தேதி கையெழுத்தாகி தற்சமயம் செயல்பாட்டில் உள்ள விமானச் சேவை ஒப்பந்தத்தை புதுப்பிக்கும் வண்ணம் இந்த ஒப்பந்தம் போடப்பட்டுள்ளது. பயணிகள் விமானத்துறையில் ஏற்பட்டுள்ள நவீன முன்னேற்றங்களை கணக்கில் கொண்டு சமீபத்தில் வந்திருக்கும் ICAO டெம்பிளேட்டுக்கு ஏற்பவும், இருநாடுகளுக்கும் இடையிலான விமான போக்குவரத்தை மேம்படுத்தும் விதத்திலும் இந்த ஒப்பந்தம் வடிவமைக்கப்பட்டுள்ளது.

சட்டம் மற்றும் நீதித்துறை அமைச்சகம் (சட்டத்துறை), நிதி அமைச்சகம் (பொருளாதார துறை, வருமான துறை), வெளியுறவுத்துறை அமைச்சகம், வணிகத் துறை மற்றும் சுற்றுலாத் துறையுடன் கலந்து ஆலோசித்து இந்த விமான சேவை ஒப்பந்தத்தின் வரைவு இறுதி செய்யப்பட்டுள்ளது.

விமான சேவை ஒப்பந்தத்தின் முக்கிய அம்சங்கள் கீழ்வருமாறு:

i. இருநாடுகளுமே ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட விமானசேவை நிறுவனங்களை நியமிக்கவேண்டும்.

ii. ஒரு நாட்டினால் நியமிக்கப்பட்ட விமானசேவை நிறுவனம் அடுத்த நாட்டில் தனது அலுவலகத்தை அமைத்து அதன் சேவைகளுகான விளம்பரங்களை செய்துகொள்ளலாம்.

iii. இருநாடுகளின் விமானசேவை நிறுவனங்களும் சமமான வாய்ப்புகளோடு, ஒப்புக்கொள்ளப்பட்ட வழித்தடத்தில் இயங்கலாம். அதன்பொருட்டு வழித்தடங்களும், விமான நேரமும் முடிவு செய்யப்படும்.

iv. விமானசேவை நிறுவனங்கள் தங்கள் சேவைகளுக்கான கட்டணங்களை நடைமுறையில் இருக்கும் வணிக நடைமுறைகளை கருத்தில்கொண்டு அதற்கேற்ப தீர்மானித்துக் கொள்ளலாம்.

v. ஒருநாட்டின் சார்பில் நியமிக்கப்பட்ட விமானசேவை நிறுவனங்கள், அவர்களுக்குள்ளாகவும், அல்லது அடுத்த நாட்டின் விமானசேவை நிறுவனத்துடனோ இணைந்து வணிக ஒப்பந்தங்களையும், கூட்டு செயல்பாடுகளையும் அமைத்துக்கொள்ளலாம்.

vi. மேற்கண்ட அம்சங்கள் மட்டுமல்லாது, சேவைகளை ரத்து அல்லது திரும்பப்பெறும் வசதி, ஒப்புக்கொண்ட சேவைகளை கண்காணிக்க தேவையான கொள்கைகள், வணிக வாய்ப்புகள், பாதுகாப்பு சம்பந்தப்பட்ட் விதிகள் போன்றவையும் இந்த ஒப்பந்தத்தின் இந்திய வரைவில் இடம்பெற்றிருக்கிறது.

vii. ஒப்பந்தத்தில் பிற்சேர்ப்பாக உள்ள நடப்பு வழித்தட விவரமும் விமானத்தொடர்பை மேம்படுத்தும் வகையில்

புதுப்பிக்கப்பட்டுள்ளது. இந்திய விமான சேவை நிறுவனங்கள் இந்தியாவின் எந்த தளத்தில் இருந்தும் ஃபிஜியின் எந்த தளத்திற்கும் விமானங்களை இயக்க முடியும். அதே நேரம் ஃபிஜி விமான நிறுவனங்கள் டில்லி, மும்பை, சென்னை ஆகிய தளங்களுக்கு நேரடியாகவும், பெங்கள்ளூரு, கொல்கத்தா ஐதராபாத் நகரங்களுக்கு குறியீடு பகிர்வு அடிப்படையிலும் இயக்க முடியும். இதுதவிர கொச்சி, வாரணாசி, அகமதாபாத், அமிர்தரசஸ் ஆகிய ஊர்களுக்கு உள்ளூர் கோட் பகிர்வு முறையில் இயக்கலாம்.