Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவில் நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்ற பிரதமருக்கு உலக நாடுகளின் தலைவர்கள் வாழ்த்து


இந்தியாவில் நடைபெற்ற 18-வது மக்களவைத் தேர்தலில் வெற்றி பெற்றதையொட்டி வாழ்த்து தெரிவித்த உலகநாடுகளின் தலைவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார். சமூக ஊடக எக்ஸ்தளத்தில் திரு மோடி உலக நாடுகளின் தலைவர்கள் அனுப்பிய செய்திகளுக்கு பதிலளித்துள்ளார்.

மொரீஷியஸ் குடியரசின் பிரதமர் திரு. பிரவிந்த் குமார் ஜூக்நாத் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

பிரதமர் பிரவிந்த் குமார் ஜூக்நாத் அவர்களின் மனமார்ந்த செய்திக்கு நன்றி. நமது அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கை, சாகர் தொலைநோக்கு, உலகளாவிய தெற்கிற்கான நமது உறுதிப்பாடு ஆகியவற்றில் மொரீஷியஸ் முக்கிய பங்கு வகிக்கிறது. நமது சிறப்பு நட்புறவை மேலும் வலுப்படுத்த ஒன்றிணைந்து பணியாற்றுவதை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

பூடான் பிரதமர் திரு. செரிங் டோப்கே வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

எனது நண்பரான, பிரதமர் செரிங் டோப்கே ஆகிய உங்களுடைய அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. பாரத்-பூடான் நட்புறவுகள் தொடர்ந்து வலுப்பெறும்”.

நேபாள பிரதமர் காம்ராட் பிரசந்தா வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

பிரதமர் காம்ராட் பிரசந்தா, உங்களது அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-நேபாள நட்புறவை வலுப்படுத்த தொடர்ந்து ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறேன்“.

இலங்கை அதிபர் திரு ரணில் விக்ரமசிங்கே வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

நன்றி திரு ரணில் விக்ரமசிங்கே. இந்தியா, இலங்கை  இடையேயான பொருளாதார  நட்புறவில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை நான் எதிர்நோக்கியுள்ளேன்.

இலங்கையின் அதிபர் திரு மஹிந்த ராஜபக்சே வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

எனது நண்பரான மஹிந்த ராஜபக்சே உங்கள் வாழ்த்துகளுக்கு நன்றி. இந்தியா-இலங்கை  இடையேயான புதிய அத்தியாயத்திற்கு உங்கள் தொடர்ச்சியான ஆதரவை எதிர்பார்க்கிறேன்.

 இலங்கை ஃபீல்ட் மார்ஷல் திரு சரத் பொன்சேகா வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

நன்றி திரு சரத் பொன்சேகா. இலங்கையுடனான எமது உறவுகள் சிறப்பு வாய்ந்தது. அதனை மேலும் வலுப்படுத்தவும், பலப்படுத்தவும் இலங்கை மக்களுடன் இணைந்து நாம் தொடர்ந்து பணியாற்றுவோம்.

இலங்கையின் எதிர்க்கட்சித் தலைவர் திரு சஜித் பிரேமதாசா வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

உங்களுடைய அன்பான வாழ்த்துக்கு நன்றி சஜித் பிரேமதாசா! இலங்கையுடனான எமது நட்புறவுகள் சிறப்பானவை, தனித்துவம் மிக்கவை. எங்கள் அண்டை நாடுகளுக்கு முன்னுரிமை என்ற கொள்கைக்கு ஏற்ப நமது உறவுகளை மேலும் வலுப்படுத்த நாம் உறுதிபூண்டுள்ளோம்!”

இத்தாலி பிரதமர் திருமதி ஜார்ஜியா மெலோனி வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி பிரதமர் ஜார்ஜியா மெலோனி. பகிரப்பட்ட மதிப்புகள் மற்றும் நலன்களின் அடிப்படையில் இந்தியா-இத்தாலி இடையேயான உத்திசார்ந்த கூட்டாண்மையை வலுப்படுத்துவதில் நாம் உறுதியாக உள்ளோம். உலகளாவிய நன்மைக்காக ஒன்றிணைந்து பணியாற்றுவதை எதிர்நோக்குகிறேன்.

 மாலத்தீவு அதிபர் டாக்டர் முகமது முய்ஸு வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

அதிபர் முகமது முய்ஸுவுக்கு நன்றி.  இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் மாலத்தீவு எங்களுடைய மதிப்புமிக்க கூட்டாளியாகவும், அண்டை நாடாகவும் உள்ளது. நமது இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த நெருக்கமான ஒத்துழைப்பை நானும் எதிர்பார்க்கிறேன்.

மாலத்தீவு துணை அதிபர் திரு. ஹுசைன் முகமது லத்தீப் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

உங்கள் அன்பான செய்தியை பாராட்டுகிறேன் துணை அதிபர் செம்பே. இருதரப்பு நட்புறவை வலுப்படுத்த நாம் தொடர்ந்து இணைந்து செயல்படுவோம்.

 மாலத்தீவின் முன்னாள் அதிபர் திரு. முகமது நஷீத் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

உங்கள் அன்பான வாழ்த்துகளுக்கு நன்றி முகமது நஷீத். இந்தியா மாலத்தீவு இடையே உள்ள நட்புறவை மேம்படுத்த உங்களது தொடர்ச்சியான ஆதரவை நாங்கள் கருத்தில் கொள்கிறோம்.”

மாலத்தீவு அரசியல்வாதியும் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையின் முன்னாள் தலைவருமான திரு அப்துல்லா ஷாஹித் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

உங்கள் அன்பான வாழ்த்துக்களுக்கு நன்றி, அப்துல்லா ஷாஹித். மாலத்தீவுகளுடனான எங்களுடைய நட்புவை புதிய உச்சத்திற்கு  கொண்டு செல்ல வேண்டும் என்ற உங்கள் விருப்பத்தை நாங்கள் பகிர்ந்து கொள்கிறோம்.”

ஜமைக்கா பிரதமர் திரு ஆண்ட்ரூ ஹோல்னெஸ் வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

நன்றி பிரதமர் ஆண்ட்ரூ ஹோல்னெஸ். இந்தியா-ஜமைக்கா நட்புறவுகள் நூற்றாண்டு பழமையான மக்களுக்கு இடையேயான உறவுகளைக் கொண்டவை. நமது மக்களின் நலனுக்காக உங்களுடன் இணைந்து செயல்படுவதை எதிர்நோக்கியுள்ளேன்.

பார்படோஸ் பிரதமர் திருமதி மியா அமோர் மோட்லி வெளியிட்டுள்ள பதிவுக்கு பிரதமர் பதிலளித்திருப்பதாவது;

நன்றி பிரதமர் மியா அமோர் மோட்லி. நமது மக்களின் நலனுக்காக இந்தியா மற்றும் பார்படோஸ் இடையே வலுவான நட்புறவுக்காக உங்களுடன் இணைந்து பணியாற்ற நான் ஆவலுடன் உள்ளேன்.

***

(Release ID: 2022868)

AD/IR/AG/RR