தூத்துக்குடி வஉசி துறைமுகத்தின் வளர்ச்சி இந்த ஆண்டு 11.35 சதவீதத்தை எட்டி சாதனை படைத்துள்ளதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டுத் தெரிவித்துள்ளார். 14.03.2023 நிலவரப்படி, இந்த துறைமுகம் 36.03 மில்லியன் டன் சரக்குகளை கையாண்டுள்ளது. 2022-23-ம் நிதியாண்டில் 36 மில்லியன் டன் சரக்குகளை கையாள வேண்டும் என கப்பல் துறை அமைச்சகம் நிர்ணயித்த இலக்கை, 17 நாட்களுக்கு முன்னதாகவே, இந்த துறைமுகம் எட்டியுள்ளது.
இது தொடர்பாக, தூத்துக்குடி வ.உ.சிதம்பரனார் துறைமுக ஆணையம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவுக்கு பதில் அளிக்கும் வகையில், பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“நன்று! இந்தியாவின் துறைமுகத்துறை வேகமாக வளர்ச்சியடைந்து வருவதுடன், பொருளாதார முன்னேற்றத்திற்குப் பங்களிக்கிறது”
***
(Release ID: 1907515)
SRI/PLM/RS/KRS
Good! India's port sector is growing rapidly and contributing to economic progress. https://t.co/xMWvj0fQrJ
— Narendra Modi (@narendramodi) March 16, 2023