Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

“இந்தியாவில் செமி கண்டக்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கான திட்டத்தின்” மாற்றங்களுக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்


பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியாவில் செமி கண்டர்கள் மற்றும் டிஸ்ப்ளே உற்பத்தி சூழலை மேம்படுத்துவதற்கான பின்வரும் திட்டங்களுக்கு ஒப்புதல் வழங்கியுள்ளது.

i. இந்தியாவில் செமி கண்டக்டர் உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான திட்டத்தின்கீழ், அனைத்து தொழில்நுட்ப முனையங்களுக்கும், திட்ட செலவில் சமவீத அளவில் 50% நிதியுதவி

ii. டிஸ்ப்ளே உற்பத்தி மையங்களை அமைப்பதற்கான திட்டத்தின்கீழ், திட்ட செலவில் சமவீத அளவில் 50% நிதியுதவி

iii. இந்தியாவில் கூட்டு செமி கண்டக்டர்கள்/ சிலிக்கான ஃபோட்டானிக்ஸ்/ சென்சார் உற்பத்தி மையங்கள் மற்றும் செமி கண்டக்டர் ஏடிஎம்பி/ ஓஎஸ்ஏடி வசதிகள் கூடுதலாக அமைக்கும் திட்டத்தின்கீழ், மூலதன செலவில், சமவீத அடிப்படையில் 50% நிதியுதவி

iv. மாற்றியமைக்கப்பட்ட திட்டத்தின்கீழ், செமி கண்டக்டர்களை அமைப்பதற்கான அனைத்து தொழில்நுட்ப முனைகளுக்கும், திட்ட செலவில், 50% ஒரேமாதிரியான நிதியுதவி அளிக்கப்படும்

மேலும் விவரங்களுக்கு இந்த ஆங்கில செய்திக் குறிப்பைக் காணவும்: https://pib.gov.in/PressReleasePage.aspx?PRID=1861129

                            **************