புதுதில்லியில் நடைபெற்ற தலைமைத்துவ மாநாட்டில் பூட்டான் பிரதமர் திரு ஷெரிங் டோப்கேயின் உரையைப் பாராட்டிய பிரதமர் திரு மோடி, இந்தியாவிற்கும், பூட்டானுக்கும் இடையிலான தனித்துவமான மற்றும் வரலாற்று பூர்வமான உறவை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம் என்றார்.
சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது;
“எனது நண்பர் பிரதமர் ஷெரிங் டோப்கேயை மீண்டும் சந்திப்பதில் மகிழ்ச்சி. இந்த மாநாட்டில் அவர் ஆற்றிய உரையைப் பாராட்டுகிறேன். இந்தியாவிற்கும் பூட்டானுக்கும் இடையிலான தனித்துவமான மற்றும் வரலாற்று பூர்வமான உறவை வலுப்படுத்த நாங்கள் தொடர்ந்து உறுதிபூண்டுள்ளோம்.
***
TS/GK/AG/DL