Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த தாய்லாந்து பிரதமருக்கு,பிரதமர் திரு மோடி நன்றி தெரிவித்தார்


இந்தியாவின் 76-வது குடியரசு தினத்தை முன்னிட்டு வாழ்த்து தெரிவித்த தாய்லாந்து பிரதமர் திருமதி படோங்டார்ன் ஷினவத்ராவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி நன்றி தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் தாய்லாந்து பிரதமர் வெளியிட்ட பதிவுக்கு பதிலளித்து  திரு மோடி கூறியுள்ளதாவது:

“இந்தியக் குடியரசின் வளமான  75 ஆண்டுகளைக் கொண்டாடும் வேளையில், பிரதமர் திருமதி படோங்டார்ன் ஷினவத்ராவின் @ingshin வாழ்த்துகளை மனதாரப் பாராட்டுகிறேன். தாய்லாந்துடனான உறவுகளை நாங்கள் மிகவும் மதிக்கிறோம். பிராந்திய இணைப்பு மற்றும் மக்களுக்கு இடையேயான இணைப்பை மேம்படுத்துவதில் தொடர்ச்சியான ஒத்துழைப்பை எதிர்நோக்குகிறோம்.”

***

(Release ID: 2096554)
TS/BR/RR/KR