Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் 13வது குடியரசுத் துணை தலைவராக திரு.எம். வெங்கையா நாயுடு அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் வாழ்த்து


இந்தியாவின் 13வது குடியரசுத் துணை தலைவராக திரு.எம்.வெங்கையா நாயுடு அவர்கள் தேர்வு செய்யப்பட்டதற்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் அவர்கள், “இந்தியாவின் குடியரசுத் துணை தலைவராக தேர்வு செய்யப்பட்டதற்கு திரு.வெங்கையா நாயுடு அவர்களுக்கு எனது வாழ்த்துக்கள். பயன்மிக்க மற்றும் உற்சாகமான பணிக்காலத்திற்கு எனது சிறந்த வாழ்த்துக்கள்.

கட்சியலும், அரசிலும் அவருடன் இணைந்து பணியாற்றியது எனது நினைவுகளில் உள்ளன. நமது உறவை என்றும் நினைத்திருப்பேன்.

தேசத்தை கட்டமைக்கும் இலக்கில் உறுதியுடனும், விடாமுயற்சியும், அர்பணிப்பும் மிக்க குடியரசுத் துணை தலைவராக திரு.வெங்கையா நாயுடு அவர்கள் நாட்டிற்கு பணியாற்றுவார் என நான் நம்புகிறேன்.” எனத் தெரிவித்துள்ளார்.

******