Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்டமான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்டமான ஆதித்யா எல் 1 விண்கலம் வெற்றிகரமாக விண்ணில் செலுத்தப்பட்டதற்காக இஸ்ரோ விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக  எக்ஸ் சமூகவலைதளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

“சந்திரயான் – 3 வெற்றிக்குப் பிறகு, இந்தியா தனது விண்வெளி பயணத்தைத் தொடர்கிறது. இந்தியாவின் முதல் சூரிய ஆய்வுத் திட்டமான ஆதித்யா -எல் 1-ஐ வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியதற்காக இந்திய விண்வெளி ஆய்வு நிறுவனமான இஸ்ரோவில் ( @isro ) உள்ள நமது விஞ்ஞானிகள் மற்றும் பொறியாளர்களுக்கு வாழ்த்துக்கள். ஒட்டுமொத்த மனிதகுலத்தின் நலனுக்காக பிரபஞ்சத்தைப் பற்றிய சிறந்த புரிதலை வளர்ப்பதற்கான நமது அயராத அறிவியல் முயற்சிகள் தொடரும்.”

இவ்வாறு பிரதமர் தெரிவித்துள்ளார்.

***

SM/ANU/PLM/DL