இந்தியாவின் மிக நீளமான கடல் பாலமான மும்பை துறைமுக இணைப்புப் பாலம் (மும்பை டிரான்ஸ் ஹார்பர் லிங் – எம் டி ஹெச் எல்) குறித்து பிரதமர் திரு நரேந்திர மோடி மகிழ்ச்சி தெரிவித்துள்ளார். இது அடுத்த தலைமுறை நவீன உள்கட்டமைப்பு என்றும், இந்தப் பாலம் மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் பணிகளை அதிகரிக்கும் என்றும் அவர் கூறியுள்ளார்.
எம் டி ஹெச் எல் பாலத்தின் சிறப்பு குறித்து மகாராஷ்டிரா துணை முதலமைச்சர் திரு தேவேந்திர பட்னாவிஸ் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவிற்கு, பதிலளிக்கும் வகையில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:
“அடுத்த தலைமுறை நவீன உள்கட்டமைப்பான இது மக்களின் வாழ்க்கையை எளிமைப்படுத்தும் நடவடிக்கையை அதிகரிக்கும் “.
******
AD/PLM/MA/KPG
Next generation infrastructure which will boost ‘Ease of Living’ for people. https://t.co/Sx3YOnryI3
— Narendra Modi (@narendramodi) May 25, 2023