‘இந்தியாவின் பாரம்பரியம்‘ (Dharohar Bharat Ki) என்ற தலைப்பிலான இரண்டு பாகங்களை கொண்ட தூர்தர்ஷன் ஆவணப்படத்தைக் காணுமாறு நாட்டு மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வேண்டுகோள் விடுத்துள்ளார். இந்த அவணப் படம் ஏப்ரல் 14 மற்றும் 15 அன்று இரவு 8 மணிக்கு டிடி நேஷனல் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும்.
தூர்தர்ஷனின் ட்விட்டர் பதிவிற்கு பதிலளித்து, பிரதமர் கூறியிருப்பதாவது:
“நமது சுதந்திரத்தைப் பாதுகாப்பதற்காக அனைத்தையும் தியாகம் செய்த நமது சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கும், சீருடையில் பணியாற்றுபவர்களின் வீரத்திற்கும், நமது பாரம்பரியத்திற்கும் ஓர் அஞ்சலி.
இரண்டு பாகங்களைக் கொண்ட இந்த ஆவணப் படத்தை டிடி நேஷனல் @DDNational தொலைக்காட்சியில் ஏப்ரல் 14 மற்றும் 15-ஆம் தேதிகளில் இரவு 8 மணிக்குக் காணுங்கள். #DharoharBharatKi”
***
AD/RB/DL
A tribute to our heritage, our freedom fighters who sacrificed their all to secure our Independence and the valour of those who serve in uniform.
— Narendra Modi (@narendramodi) April 14, 2023
Do watch this two-part documentary on @DDNational on 14th and 15th April at 8 PM. #DharoharBharatKi https://t.co/5lf3X7CiCH