இந்தியாவின் ஜி20 தொடர்பான 6-வது ஒருங்கிணைப்புக் குழுக் கூட்டம் புதுதில்லி பிரகதி மைதானத்தில் உள்ள சர்வதேச கண்காட்சி மற்றும் மாநாட்டு மையத்தில் பிரதமரின் முதன்மைச் செயலாளர் டாக்டர் பி கே மிஸ்ரா தலைமையில் இன்று நடைபெற்றது. புதுதில்லியில் 2023, செப்டம்பர் 9, 10 அன்று நடைபெற உள்ள ஜி20 மாநாடு தொடர்பான முன்னேற்பாடுகள் குறித்து அவர் ஆய்வு செய்தார்.
ஜி20 மாநாடு நடைபெறுவதையொட்டி தில்லி மற்றும் அண்டை மாநிலங்களில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள், கட்டமைப்பு மேம்பாடு, ஊடகம், விமான நிலைய ஒருங்கிணைப்பு, பாதுகாப்பு, மாநாடு நடைபெறும் இடத்தில் மேற்கொள்ளப்பட்டுள்ள ஏற்பாடுகள் குறித்து குழு விவாதித்தது. அப்போது பேசிய டாக்டர் மிஷ்ரா, ஜி20 மாநாட்டை வெற்றிகரமாக நடத்தும் வகையில், அரசின் அனைத்து துறைகளும் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொண்டார்.
ஜி20 தொடர்பாக இது வரை நடைபெற்ற கூட்டங்கள் மற்றும் நடைபெற உள்ள கூட்டங்கள் குறித்தும் ஒருங்கிணைப்புக் குழு ஆய்வு செய்தது. நாடு முழுவதும் இதுவரை 55 நகரங்களில் 120 கூட்டங்கள் நடைபெற்றுள்ளன.
ஜி20-ன் இந்தியா தலைமைத்துவம் தொடர்பான அனைத்து ஏற்பாடுகளையும் தயார் செய்வதற்கும், கண்காணிப்பதற்கும் அமைச்சரவை ஒருங்கிணைப்புக் குழுவுக்கு அங்கீகாரம் அளித்துள்ளது.
***
SM/IR/RS/KRS