Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியாவின் ஜி20 தலைமைத்துவத்திற்கான ஒருங்கிணைப்புக் குழுவின் 9-வது கூட்டத்திற்கு பிரதமரின் முதன்மை செயலாளர் தலைமை தாங்கினார்


பிரதமரின் முதன்மை செயலாளர் டாக்டர் பி.கே.மிஸ்ரா தலைமையில் ஜி 20 ஒருங்கிணைப்புக் குழுவின் 9 வது கூட்டம் 30 ஆகஸ்ட் 2023 அன்று நடைபெற்றது. ஜி20 புது தில்லி தலைவர்கள் உச்சிமாநாட்டிற்கான ஏற்பாடுகள், நெறிமுறை, பாதுகாப்பு மற்றும் ஊடகம் தொடர்பான ஏற்பாடுகள் குறித்து முதன்மை செயலாளர் ஆய்வு செய்தார். இந்தக் கூட்டத்தில் ஜி 20 செயலகம் மற்றும் வெளியுறவு, உள்துறை, கலாச்சாரம், தகவல் மற்றும் ஒலிபரப்பு அமைச்சகங்கள் மற்றும் தொலைத் தொடர்புத் துறையைச் சேர்ந்த உயர் அதிகாரிகள் கலந்து கொண்டனர்.

பாரத் மண்டபத்தில் பணிகள் திருப்திகரமாக நடந்து வருவது குறிப்பிடத்தக்கது. தனித்துவமான இந்திய அனுபவத்திற்காக, கலாச்சாரம் மற்றும் ஜனநாயகத்தின் தாய்குறித்த கண்காட்சிகள் பாரத் மண்டபத்தில் அமைக்கப்படுகின்றன. மேலும், நடராஜர் சிலை அமைக்கும் பணிகளின் முன்னேற்றம் குறித்தும், விருந்தினர்களுக்காக பிரத்யேகமாக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள தலைவர்களின் வாழ்க்கைத் துணைவர்களுக்கான நிகழ்ச்சி குறித்தும் முதன்மைச் செயலாளர் ஆய்வு செய்தார்.

முதன்முறையாக, ‘ஜி 20 இந்தியாஎன்ற மொபைல் செயலி தயாரிக்கப்பட்டுள்ளது.  இது இப்போது ஆண்ட்ராய்டு மற்றும் ஐஓஎஸ் இரண்டிலும் பதிவிறக்கம் செய்ய கிடைக்கிறது. பாரத் மண்டபத்தில் அமைக்கப்பட்டுள்ள புதுமை கண்டுபிடிப்பு மையம்மற்றும் டிஜிட்டல் இந்தியா பரிசோதனை மையம்மூலம் ஜி20 பிரதிநிதிகள் மற்றும் ஊடக உறுப்பினர்கள் டிஜிட்டல் இந்தியாவை நேரடியாகக் காண்பார்கள்.

லாஜிஸ்டிக்ஸ் தரப்பில், பயிற்சிகள் நடத்தப்பட்டு, வரும் நாட்களில் ஆடை ஒத்திகைகள் திட்டமிடப்பட்டுள்ளன. பாதுகாப்பு அம்சங்கள் குறித்து, முதன்மை செயலருக்கு, சம்பந்தப்பட்ட அதிகாரிகள் விளக்கினர். பொதுமக்களுக்கான போக்குவரத்து ஆலோசனை வெளியிடப்பட்டுள்ளது. பாதுகாப்பு மற்றும் நெறிமுறை காரணங்களுக்காக, கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டாலும், பொதுமக்களுக்கு சிரமம் ஏற்படாத வகையில் முயற்சிகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்று முதன்மை செயலாளர் வலியுறுத்தினார். நகரில் அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படக்கூடாது என்று அவர் அறிவுறுத்தினார்.

***

ANU/AD/IR/KPG