Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இந்தியக் கடலோரக் காவல்படையின் நிறுவன தினத்தில் அதன் முன்மாதிரியான சேவைக்குப் பிரதமர் பாராட்டு


இந்தியக் கடலோரக் காவல்படையின் நிறுவன தினத்தை முன்னிட்டு, நமது பரந்த கடற்கரையைப் பாதுகாப்பதில் அதன் துணிச்சல், அர்ப்பணிப்பு, இடைவிடாத கண்காணிப்பு ஆகியவற்றைப் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டியுள்ளார். கடல்சார் பாதுகாப்பு முதல் பேரிடர் மீட்பு வரை, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை, இந்தியக் கடலோரக் காவல்படை நமது கடல்களின் வலிமையான பாதுகாவலராக உள்ளது எனவும் நமது நீர்நிலைகளின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் அது உறுதி செய்கிறது என்றும் திரு நரேந்திர மோடி கூறியுள்ளார்.

இது தொடர்பாக சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:

கடலோரக் காவல் படையின் நிறுவன தினமான இன்று, நமது பரந்த கடற்கரையைத் துணிச்சல், அர்ப்பணிப்பு, இடைவிடாத காண்காணிப்பு ஆகியவற்றுடன் பாதுகாப்பதற்காக அந்தப் படையைப் பாராட்டுகிறோம். கடல்சார் பாதுகாப்பு முதல் பேரிடர் மீட்பு வரை, கடத்தல் தடுப்பு நடவடிக்கைகள் முதல் சுற்றுச்சூழல் பாதுகாப்பு வரை, இந்தியக் கடலோரக் காவல்படை நமது கடல்களின் வலிமையான பாதுகாவலராக உள்ளது. நமது நீர்நிலைகளின் பாதுகாப்பையும் மக்களின் பாதுகாப்பையும் அது உறுதி செய்கிறது. @IndiaCoastGuard”

*********************

(Release ID: 2098333)
TS/PLM/RR/KR