பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட்ஸ் இடையே, இணைய தொழில்நுட்ப ஒத்துழைப்பு மற்றும் இணைய குற்றங்களை தடுத்தல் தொடர்பாக கடந்த மாதம் கையெழுத்தான புரிந்துணர்வு ஒப்பந்தத்துக்கு ஏற்பளித்தது.
இந்த ஒப்பந்தம் இணைய குற்றங்களை கையாளுவது தொடர்பாக இரு நாடுகளுக்கிடையே ஒத்துழைப்பை அதிகரிக்கும். இரு நாடுகளும், இணையம் தொடர்பாகவும், அனைத்து வடிவிலான இணைய குற்றங்களை தகவல் பரிமாற்றம், ஒத்துழைப்பு, இணைய குற்றப் புலனாய்வில் பயிற்சி ஆகியவற்றில் ஒத்துழைப்பு மேற்கொள்ளும். இதற்கான அதிகார அமைப்பாக மத்திய உள்துறை அமைச்சகம் இந்திய தரப்பில் இருந்து இந்த ஒப்பந்தம் செயல்படுத்தப்படுவதை கண்காணிக்கும். ஐக்கிய அரபு எமிரேட்டுகள் தரப்பில், கிரிமினல் செக்யூரிட்டி, உள்நாட்டு பாதுகாப்பு, மற்றும் நாட்டு பாதுகாப்பு, தீவிரவாதம், மற்றும் மரபுசாரா ஆயுதம் தொடர்பான குற்றங்கள் துறையின் இயக்குநர் பொறுப்பாக இருப்பார்.
இணையத்தில் தொடர்ந்து அதிகரித்து வரும் ஆபத்துகளில் இருந்து மக்களை காப்பாற்றுவதற்காகவே, இந்தியா மற்றும் ஐக்கிய அரபு எமிரேட் ஆகிய இரு நாடுகளும் இக்குற்றங்களை தடுக்க இணைந்து செயல்படுவது என்று முடிவெடுத்துள்ளன.