Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் மோடியின் தொலைபேசி உரையாடல்


இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனியுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று தொலைபேசியில் உரையாடினார்.

இத்தாலி விடுதலை தினத்தின் 79-வது ஆண்டு விழாவை முன்னிட்டு இத்தாலி பிரதமர் மெலோனிக்கும், அந்நாட்டு மக்களுக்கும் பிரதமர் வாழ்த்து தெரிவித்தார்.

இத்தாலியின் புக்லியாவில் 2024 ஜூன் மாதம் நடைபெறவுள்ள ஜி7 உச்சி மாநாட்டின் மக்கள் தொடர்பு அமர்வுகளுக்கு அழைப்பு விடுத்ததற்காக மெலோனிக்குப் பிரதமர் நன்றி தெரிவித்தார். இத்தாலி தலைமையில் நடைபெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில், இந்தியாவின் ஜி20 தலைமைப் பொறுப்பின் முக்கிய முடிவுகளை, குறிப்பாக உலகளாவிய தெற்கிற்கு ஆதரவளிக்கும் நாடுகளை முன்னெடுத்துச் செல்வது குறித்து தலைவர்கள் விவாதித்தனர்.

இருதரப்பு உத்திசார் ஒத்துழைப்பைத் தொடர்ந்து வலுப்படுத்துவது என்ற தங்களது உறுதிப்பாட்டை அவர்கள் மீண்டும் உறுதி செய்தனர்.

பரஸ்பர அக்கறை கொண்ட பிராந்திய மற்றும் உலகளாவிய முன்னேற்றங்கள் குறித்தும் இரு தலைவர்களும் கருத்துக்களை பரிமாறிக் கொண்டனர்.

***

SMB/AG/KV