இத்தாலி பிரதமர் திரு கியூசெப்பி கான்டே-வுடன் பிரதமர் திரு.நரேந்திர மோடி, இன்று தொலைபேசியில் உரையாடினார்.
இத்தாலியில் கோவிட்-19 பெருந்தொற்றால் உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் இரங்கல் தெரிவித்தார். இந்த நெருக்கடியான நேரத்தில் இத்தாலி மக்களின் உறுதியான செயல்பாடுகளுக்கு பாராட்டு தெரிவித்தார்.
இந்த பெருந்தொற்றால் தங்களது நாடுகளிலும், சர்வதேச அளவிலும் சுகாதாரத்துக்கும், பொருளாதாரத்துக்கும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்வதற்கு மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து இரு தலைவர்களும் ஆலோசனை நடத்தினர். பரஸ்பரம் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும் என்பதை இருவரும் குறிப்பிட்டனர். மேலும், இரு நாடுகளிலும் தவித்துவரும் மக்களுக்கு உதவ பரஸ்பரம் ஒத்துழைத்து வருவதற்கு பாராட்டு தெரிவித்தனர்.
அத்தியாவசிய மருந்துகள் மற்றும் பிற பொருட்களை வழங்குவதில் இத்தாலிக்கு இந்தியா கட்டுப்பாடு இல்லாத ஆதரவு வழங்கும் என்று திரு.கான்டே-விடம் பிரதமர் உறுதியளித்தார்.
இருதரப்பு நல்லுறவை மேலும் வலுப்படுத்த இந்தியா மற்றும் இத்தாலி இடையேயான தீவிர ஆலோசனை மற்றும் ஒத்துழைப்பை தொடர்வது என தலைவர்கள் ஒப்புக் கொண்டனர்.
பொருத்தமான நேரத்தில் இத்தாலிக்கு பயணம் மேற்கொள்ளுமாறு பிரதமருக்கு அழைப்பு விடுத்துள்ளதை இத்தாலி பிரதமர் நினைவுகூர்ந்தார்.
=================
Conveyed my deep condolences to PM @GiuseppeConteIT for the loss of lives in Italy due to COVID-19. India and Italy will work together for addressing the challenges of the post-COVID world, including through our consecutive presidencies of the G20.
— Narendra Modi (@narendramodi) May 8, 2020