Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இதுவரை இல்லாத அளவுக்கு எச்ஏஎல் நிறுவனம் அதிக வருவாய் ஈட்டியதற்கு பிரதமர் பாராட்டு


இதுவரை இல்லாத அளவுக்கு அதிக வருவாய் ஈட்டியதற்காக எச்ஏஎல் நிறுவனத்திற்கும், அதன் குழுவினருக்கும் பிரதமர் திரு நரேந்திர மோடி பாராட்டு தெரிவித்துள்ளார். கடந்த நிதியாண்டில் ரூ.24,620 கோடியாக இருந்த வருவாய்2022-23 நிதியாண்டில் சுமார் ரூ.26,500 கோடியாக (தற்காலிக மற்றும் தணிக்கை செய்யப்படாத) அதிகரித்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டில் 8% வருவாய் வளர்ச்சியை நிறுவனம் பதிவு செய்துள்ளது.

இது தொடர்பான எச்ஏஎல் நிறுவனத்தின்  ட்வீட்டுக்கு பதிலளித்துள்ள பிரதமர் கூறியிருப்பதாவது;

‘’ அற்புதமான சாதனை! எச்ஏஎல் நிறுவனத்தின்  முழு குழுவின் அருமையான  ஆர்வத்தையும், செயல்பாட்டையும்  நான் பாராட்டுகிறேன்.”

**********

AD/PKV/DL