Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவுக்குப் பிரதமர் இரங்கல்


 

புகழ்பெற்ற இதய அறுவை சிகிச்சை நிபுணர் டாக்டர் கே.எம்.செரியன் மறைவிற்குப் பிரதமர் திரு நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள சமூக ஊடக எக்ஸ்த்தல பதிவில் கூறியிருப்பதாவது:

“நமது நாட்டின் தலைசிறந்த மருத்துவர்களில் ஒருவரான டாக்டர் கே.எம்.செரியனின் மறைவு வேதனை அளிக்கிறது. இதயவியல் மருத்துவத்தில் அவரது பங்களிப்பு எப்போதும் நினைவு கூரப்படும். அது பல உயிர்களைக் காப்பாற்றுவது மட்டுமல்லாமல், எதிர்கால மருத்துவர்களுக்கு வழிகாட்டவும் உதவும். புதிய தொழில்நுட்பம், புதுமைக் கண்டுபிடிப்புகள் ஆகியவற்றுக்கு அவர் அளித்த முக்கியத்துவம் எப்போதும் தனித்து நிற்கும். இந்த துயரமான நேரத்தில் எனது எண்ணங்கள் அவரது குடும்பத்தினர், நண்பர்களுடன் உள்ளன: பிரதமர் திரு நரேந்திர மோடி (@narendramodi) “

***

PLM/KV