பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவை, இடதுசாரி அதிதீவிரவாதம் உள்ள பகுதிகளில் பாதுகாப்புக்குரிய இடங்களில் 2ஜி செல்பேசி சேவைகளை 4ஜி ஆக உயர்த்த அனைத்து சேவை பொறுப்பு நிதியத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது.
முதல்கட்டத்தில் 2,343 இடங்களை மேம்படுத்த (வரிகள் மற்றும் தீர்வைகள் நீங்கலாக) ரூ.1,884.59 கோடி செலவு பிடிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இந்த இடங்களை பிஎஸ்என்எல் அடுத்த ஐந்தாண்டுகளுக்கு அதன் சொந்த செலவில் பராமரிக்கும். இந்த இடங்கள் பிஎஸ்என்எல்-க்கு சொந்தமாக இருப்பதால் இந்தப் பணி பிஎஸ்என்எல்-க்கு வழங்கப்பட்டுள்ளது.
இடதுசாரி அதிதீவிரவாதம் உள்ள பகுதிகளில் செயல்பாடுகள் மற்றும் பராமரிப்புக்கான ஐந்தாண்டு ஒப்பந்தக்காலத்திற்கு பின் ரூ.541.80 கோடி செலவாகும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. இதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. அமைச்சரவை ஒப்புதல் அளித்த தேதியில் இருந்து அல்லது 4ஜி சேவைகள் தொடங்கியதில் இருந்து 12 மாதங்கள் வரை இந்த நீடிப்பு இருக்கும்.
***************
Today’s Cabinet decision will improve connectivity in areas affected by Left Wing Extremism and will ensure proper internet access. This will enhance our efforts to build an Aatmanirbhar Bharat. https://t.co/YuuPSm3wmr
— Narendra Modi (@narendramodi) April 27, 2022