Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் பரிசு

இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் பரிசு

இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் பரிசு

இங்கிலாந்து பிரதமருக்கு பிரதமர் பரிசு


இங்கிலாந்து பிரதமர் திரு. டேவிட் கேமரூனுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று மரம், பளிங்குக்கல், வெள்ளி ஆகியவற்றால் செய்த ஒரு ஜோடி புத்தக அடுக்கு இறுதி நிலைகளை பரிசளித்தார். இவற்றின் மத்தியில் வெள்ளி மணிகள் பொருத்தப்பட்டுள்ளன. மணி ஆன் ஞானத்தையும் உள்ளொலியையும் குறிக்கும் சின்னங்கள். இவற்றின் உள்விளிம்புகளில் பகவத்கீதையின் வாசகங்கள் சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் பொறிக்கப்பட்டுள்ளன. பகவத்கீதையின் அத்தியாயம் 13-ல் வாசகம் 15-16 ஆன இவை அடிப்படை இறுதி உண்மையை விளம்புகின்றன. ஒவ்வொரு மணியிலும் ஒரு வாசகம் பொறிக்கப்பட்டுள்ளது.

(சமஸ்கிருத மொழி வாசகம்)

எந்தவித உயிராக இல்லாமல் இருப்பினும் உள்ளேயே; அசையாத எனினும் அசைகின்ற; மிக சுரூபமாக உணர முடியாத வகையில்; தொலைதூரத்தில் எனினும் மிக அருகிலேயே அது உள்ளது (வரி 15)

அது பிரிக்க முடியாதது எனினும் எல்லா உயிர்களிடமும் பிரிந்து காணப்படுகிறது. அதே படைத்தவன் என அறிக, பாதுகாப்பவனும் அழிப்பவனும் அவனே (வரி 16)

எனப் பொருள்படும். அதன் ஆங்கில மொழியாக்கம் பொறிக்கப்பட்டுள்ளது.

முதலாம் உலகப்போர் தொடர்பாக ராபர்ட் கிரேப்ஸ் எழுதிய “Goodbye to All That” என்ற நூல் பிரதமர் திரு. கேமரூனுக்கு மிகப்பிடித்த நூல் என்பதால் பிரதமர் மோடி அவருக்கு டேவிட் ஒமிசி இயற்றிய “Voices of the Great War“ எனும் நூலைப் பரிசளித்தார்.

பிரதமர் கேமரூனின் துணைவியாருக்கு கலை நுணுக்கத்துடன் கூடிய துத்தநாகம் கலந்த இரும்பினால் செய்த அரன்முலா கண்ணாடியையும் பஷ்மினா கற்களையும் பரிசளித்தார்.

*****