Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் அவர்கள் பிரதமருடன் சந்திப்பு

ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத்  துறை அமைச்சர் ஜூலி பிஷப் அவர்கள் பிரதமருடன் சந்திப்பு


ஆஸ்திரேலியாவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஜூலி பிஷப் அவர்கள் பிரதமர் திரு. நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.

2017 ஏப்ரலில் ஆஸ்திரேலிய பிரதமர் திரு. டர்ன்புல் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணம் வெற்றிகரமாக முடிந்ததை நினைவு கூர்ந்த பிரதமர், 2014 ஆம் ஆண்டு தான் ஆஸ்திரேலியாவிற்கு மேற்கொண்ட பயணத்திற்கு பின் இரு நாடுகளுக்கும் இடையே உள்ள உறவு மேலும் வலுவடைந்துள்ளது என்று கூறினார்.

2017 ஏப்ரலில் ஆஸ்திரேலிய பிரதமர் திரு. டர்ன்புல் இந்தியாவிற்கு மேற்கொண்ட பயணத்திற்கு பிறகு இருதரப்பு உறவில் ஏற்பட்டுள்ள முன்னேற்றம் குறித்து பிஷப் அவர்கள் பிரதமருக்கு எடுத்துரைத்தார்.

இரு நாடுகளுக்கும் நன்மை தரக்கூடிய பிராந்திய மற்றும் உலகளாவிய பிரச்சினைகளை குறித்து பிரதமர் மோடியும் பிஷப் அவர்களும் உரையாடினர்.
சர்வதேச சூரிய எரிசக்தி கூட்டணியில் ஆஸ்திரேலியா இணைந்திருப்பதை வரவேற்ற பிரதமர் ஆஸ்திரேலியாவின் பங்கேற்பு இந்த கூட்டணியை மேலும் வலுப்படுத்தும் என்று கூறினார்.