Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜென்ரலுடன் பிரதமரின் சந்திப்பு

ஆஸ்திரேலியாவின் கவர்னர் ஜென்ரலுடன்  பிரதமரின் சந்திப்பு


ஆஸ்திரேலியாவின் சிட்னியில் உள்ள கவர்னர் ஜென்ரலின் அதிகாரப்பூர்வ இல்லத்தில் 2023, மே 24 அன்று ஆஸ்திரேலிய கவர்னர் ஜென்ரல் மேன்மைதங்கிய திரு டேவிட் ஹர்லியைப் பிரதமர் திரு நரேந்திர மோடி சந்தித்தார்.

2019-ல் நியூ சௌத் வேல்ஸ் கவர்னராக இந்தியாவுக்கு வருகை தந்ததை கவர்னர் ஜென்ரலுடனான சந்திப்பின் போது பிரதமர்  நினைவுகூர்ந்தார்.

நீடித்திருக்கும் இருதரப்பு உறவுகளை வலுப்படுத்துவதற்கான வழிகள் பற்றி இருதலைவர்களும் விவாதித்தனர்.

ஆஸ்திரேலியாவில் உள்ள இந்திய சமூகத்தினரின் ஆக்கபூர்வ பங்களிப்பையும், இரு நாடுகளுக்கிடையே நெருக்கமான உறவுகளை  வளர்ப்பதில் அவர்களின் பங்களிப்பையும் பிரதமர் நினைவுகூர்ந்தார்.

******

(Release ID: 1926801)

AP/SMB/AG/KRS