Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஸ்திரேலியப் பிரதமர் திரு.மால்கம் டர்ன்புல்லுடன்- பிரதமர் தொலைபேசியில் பேசினார்


ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. மால்கம் டர்ன்புல் இன்று பிரதமர் திரு. நரேந்திர மோடியுடன் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசினார்.

தனது சமீபத்திய இந்திய பயணம் வெற்றிகரமாக அமைந்ததற்கு பிரதமருக்கு ஆஸ்திரேலியப் பிரதமர் திரு. மால்காம் டர்ன்புல் நன்றி தெரிவித்துக் கொண்டார்.

பயிற்சிப் பெற்ற பணியாளர்கள் தொடர்பான ஆஸ்திரேலியாவின் விசா கட்டுப்பாடுகளில் கொண்டுவரப்பட்டுள்ள சமீபத்திய மாற்றங்கள் தாக்கம் குறித்து பிரதமர் திரு. நரேந்திர மோடி தனது கவலையை அப்போது வெளியிட்டார். இந்த பிரச்சினை குறித்து இருநாட்டு அதிகாரிகளும் தொடர்ந்து நெருக்கமாக ஆலோசித்து பணியாற்றுவதென இரு பிரதமர்களும் ஒப்புக் கொண்டனர்.

சென்ற மாதம் திரு. மால்கம் டர்ன்புல் இந்தியாவில் பயணம் மேற்கொண்ட பிறகு அதன் தொடர் நடவடிக்கைகள் குறித்தும் இரு பிரதமர்களும் ஆலோசனை நடத்தினார்கள். இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கு தேவையான நடவடிக்கைகள் குறித்தும் அவர்கள் பேசினார்கள்.