Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆஷாதி ஏகாதசியை முன்னிட்டு பிரதமர் மக்களுக்கு வாழ்த்து


ஆஷாதி ஏகாதசி திருநாளை முன்னிட்டு பிரதமர் திரு.நரேந்திர மோடி நாட்டு மக்களுக்கு வாழ்த்துத் தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டிருக்கும் செய்தியில், “ஆஷாதி ஏகாதசி திருநாளை முன்னிட்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துகள். இந்த சிறப்பான நாளில், அளவற்ற மகிழ்ச்சியையும், நல்ல ஆரோக்கியத்தையும் அளித்து அருள்புரியுமாறு விட்டல் சாமியிடம் வேண்டுவோம். நமது பண்பாட்டின் சிறப்பான கூறுகளை வெளிப்படுத்தும் வரகரி இயக்கம், நல்லிணக்கத்தையும், சமத்துவத்தையும் வலியுறுத்துகிறது” என்று கூறியுள்ளார்.

***