Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்காக மத்திய அரசின் தேசிய சுகாதார ஆணையத்திற்கும் ஒடிசா அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதற்காக ஒடிசா மக்களுக்கு பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆயுஷ்மான் பாரத் பிரதம மந்திரி மக்கள் ஆரோக்கிய திட்டத்திற்கு மத்திய அரசின் தேசிய சுகாதார ஆணையத்திற்கும் ஒடிசா அரசின் சுகாதாரம் மற்றும் குடும்ப நலத்துறைக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானதற்காக ஒடிசா மக்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார். இந்தத் திட்டம் குறைந்த கட்டணத்தில், ஒடிசாவின் மகளிர் மற்றும் முதியோருக்கு உயர்தர சுகாதார சேவை கிடைப்பதை உறுதி செய்யும் என்று திரு மோடி குறிப்பிட்டுள்ளார்.

ஒடிசா முதலமைச்சர் திரு மோகன் சரண் மாஞ்சியின் சமூக ஊடக எக்ஸ் தளப் பதிவுக்கு பதிலளித்து பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

ஒடிசா மக்களுக்கு வாழ்த்துகள்!

ஒடிசாவின் எனது சகோதரிகளுக்கும், சகோதரர்களுக்கும் ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் பலன்கள் முந்தைய அரசால் மறுக்கப்பட்டன. உண்மையில் அது கேலிக்குரியது. இந்தத் திட்டம் குறைந்த செலவில் மிக உயர்ந்த, தரமான சுகாதார சேவையை உறுதி செய்வதாகும். குறிப்பாக ஒடிசாவின் மகளிர் மற்றும் முதியோருக்கு பயனளிக்கும்.”

***

 

TS/SMB/AG/DL