Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திர மாநில உதய தினத்தை முன்னிட்டுப் பிரதமர் வாழ்த்து தெரிவித்துள்ளார்


ஆந்திரப் பிரதேச உதய தினத்தை முன்னிட்டு ஆந்திரப் பிரதேச மக்களுக்குப் பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டுள்ளதாவது:

ஆந்திரப் பிரதேச மாநிலம் உருவான தினத்தை முன்னிட்டு, இந்த ஆற்றல்மிக்க மாநில மக்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். அசாதாரண திறமை, அசைக்க முடியாத உறுதிஉறுதியான விடாமுயற்சி ஆகியவற்றால், ஆந்திர மக்கள் பல்வேறு துறைகளில் தங்களின் முத்திரையைப் பதித்துள்ளனர். அவர்கள் தொடர்ந்து வளமுடனும், வெற்றியுடனும் வாழப் பிரார்த்திக்கிறேன்.”

******

ANU/PKV/SMB/KPG