Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு

ஆந்திர மாநிலம் திருமலையில் உள்ள ஸ்ரீ  வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில் பிரதமர் வழிபாடு


ஆந்திர மாநிலம், திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி திருக்கோவிலில் பிரதமர் திரு. நரேந்திர மோடி வழிபாடு நடத்தினார். 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் செழிப்புக்காக அவர் பகவான் வெங்கடேஸ்வர சுவாமியின் ஆசிகளைக் கோரியுள்ளார். திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலின் வழிபாடு குறித்த சில காட்சிகளையும்  திரு மோடி பகிர்ந்து கொண்டிருக்கிறார்.

 

 சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் பதிவிட்டிருப்பதாவது:

 

திருமலையில் உள்ள ஸ்ரீ வெங்கடேஸ்வர சுவாமி கோவிலில், 140 கோடி இந்தியர்களின் ஆரோக்கியம், நல்வாழ்வு மற்றும் வளர்ச்சிக்காக பிரார்த்தனை செய்தேன்.

இந்த நிகழ்வின் சில காட்சிகளையும் பிரதமர் பகிர்ந்து கொண்டுள்ளார்.

 இது பற்றி அவர் பதிவிட்டுள்ளதாவது:

ஓம் நமோ வெங்கடேசாய!

 

திருமலையில் இருந்து மேலும் சில காட்சிகள்.

***

PKV/BR/KRS