ஆந்திரப் பிரதேச மாநிலம் திருப்பதியில் கூட்ட நெரிசலில் சிக்கி உயிரிழந்தவர்களுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
“ஆந்திர மாநிலம் திருப்பதியில் ஏற்பட்ட கூட்ட நெரிசலை அறிந்து வேதனை அடைந்தேன். தங்களுக்கு நெருக்கமானவர்களையும் அன்புக்குரியவர்களையும் இழந்துள்ளவர்களுக்கு எனது ஆறுதல்களை தெரிவித்துக் கொள்கிறேன். காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய பிரார்த்திக்கிறேன். பாதிக்கப்பட்டவர்களுக்கு தேவையான அனைத்து உதவிகளையும் ஆந்திர அரசு செய்து வருகிறது: பிரதமர் @narendramodi”
***
TS/BR/KR
Pained by the stampede in Tirupati, Andhra Pradesh. My thoughts are with those who have lost their near and dear ones. I pray that the injured recover soon. The AP Government is providing all possible assistance to those affected: PM @narendramodi
— PMO India (@PMOIndia) January 8, 2025