Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆந்திரப் பிரதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு விழாவில் பிரதமர் பங்கேற்றார்

ஆந்திரப் பிரதேசத்தில் புதிய அரசு பதவியேற்பு  விழாவில் பிரதமர் பங்கேற்றார்


ஆந்திரப் பிரதேச முதலமைச்சராக பதவியேற்ற திரு. என். சந்திரபாபு நாயுடுவுக்கு பிரதமர் திரு. நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

இது குறித்து சமூக ஊடக எக்ஸ் தளத்தில் பிரதமர் கூறியிருப்பதாவது:

புதிய ஆந்திர அரசின் பதவியேற்பு விழாவில் கலந்து கொண்டேன். முதலமைச்சரான திரு. என். சந்திரபாபு நாயுடுவுக்கும், அமைச்சரவையில் அமைச்சர்களாக பதவியேற்ற அனைவருக்கும் வாழ்த்துகள். தெலுங்கு தேசம், ஜனசேனா, பிஜேபி அரசு ஆந்திராவின் பெருமையை புதிய உச்சத்திற்கு கொண்டு செல்லவும், மாநில இளைஞர்களின் விருப்பங்களை நிறைவேற்றுவதற்கும் முழுமையாக உறுதிபூண்டுள்ளது.

***

(Release ID: 2024656)

SG/IR/AG/RR