பெர்மிங்ஹாம் காமன்வெல்த் போட்டிகள், 2022-இல் ஆடவர் இரட்டையர் பேட்மிண்டனில் தங்கப் பதக்கம் வென்ற சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி, சிராஜ் ஷெட்டி ஆகியோருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
ட்விட்டர் பதிவில் பிரதமர் தெரிவித்ததாவது:
“இந்திய பேட்மிண்டன் வீரர்கள் குழு வெற்றிக்கும், சிறப்பான செயல்பாட்டிற்கும் மறுவடிவம் கொடுத்துள்ளது. சாத்விக் சாய்ராஜ் ராணிக்ரெட்டி @satwiksairaj, சிராஜ் ஷெட்டி @Shettychirag04 ஆகியோர் குழு செயல்பாடு மற்றும் திறமையை அபாரமாக வெளிப்படுத்தினார்கள். தங்கப் பதக்கம் வென்று தந்த அவர்களால் பெருமிதம் கொள்கிறேன். வரவிருக்கும் காலங்களிலும் இந்தியாவிற்கு மேலும் பல வெற்றிகளை அவர்கள் வெல்லட்டும். #Cheer4India”
******
India's Badminton contingent has redefined success and excellence. Superb display of teamwork and skills by @satwiksairaj and @Shettychirag04. Proud of them for bringing home the Gold medal. May they keep winning more laurels for India in the times to come. #Cheer4India pic.twitter.com/eKbrv6oidY
— Narendra Modi (@narendramodi) August 8, 2022