Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆடவருக்கான 74 கிலோ ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் தங்கப் பதக்கம் வென்ற நவீன் குமாருக்கு பிரதமர் வாழ்த்து


பர்மிங்ஹாம் காமன்வெல்த் விளையாட்டு போட்டியில் ஆடவர்  ஃப்ரீஸ்டைல் மல்யுத்தப் போட்டியில் 74 கிலோ எடைப்பிரிவில் தங்கப் பதக்கம் வென்ற நவீன் குமாருக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.

பிரதமர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது;

“மேலும் பெருமை சேர்த்துள்ள நமது  மல்யுத்த வீரர்களுக்கு நன்றி. தங்கப் பதக்கம் வென்ற நவீன் குமாருக்கு வாழ்த்துகள். அவரது அபாரமான  தன்னம்பிக்கையும், சிறந்த நுட்பத்திறனும் முழுவதுமாக வெளிப்பட்டது. அவரது வருங்கால முயற்சிகளுக்கு வாழ்த்துக்கள்#Cheer4India “.