பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்ற இந்திய குத்துச்சண்டை வீரர் முகமத் ஹுசாமுதீனுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
பிரதமர் தமது ட்விட்டர் செய்தியில் கூறியிருப்பதாவது:
“தலைசிறந்த குத்துச்சண்டை வீரரான முகமத் ஹுசாமுதீன், ஏராளமான விளையாட்டுப் போட்டிகளில் வெற்றிகளைக் குவித்துள்ளார். அபாரமான நுட்பங்கள் மற்றும் நெகிழ்த்தன்மை உணர்வைப் பெற்றுள்ள இந்த சிறந்த வீரர், பெர்மிங்ஹாமில் ஆடவருக்கான 57 கிலோ பிரிவில் வெண்கலப் பதக்கம் வென்றுள்ளார். அவருக்கு பாராட்டுகள். அவருக்கு நல்வாழ்த்துகளை நான் தெரிவித்துக் கொள்கிறேன். #Cheer4India”
•••••••••••••
Mohammad Hussamuddin is an excellent boxer who has succeeded in many sporting events. Powered by wonderful techniques and a spirit of resilience, this bright athlete wins a Bronze medal in the Men's 57kg event at Birmingham. Congrats to him. I wish him the very best. #Cheer4India pic.twitter.com/0uZKpJPv6N
— Narendra Modi (@narendramodi) August 7, 2022