Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு பிரதமர் வாழ்த்து


பெர்மிங்ஹாமில் நடைபெறும் காமன்வெல்த் போட்டிகள் 2022-இல் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் வெண்கலப் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் தீபக் நெஹ்ராவிற்கு  பிரதமர்  திரு நரேந்திர மோடி வாழ்த்துகளைத் தெரிவித்துள்ளார்.

அவர் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கூறியிருப்பதாவது:

மற்றொரு மல்யுத்த வீரர், இந்தியாவிற்கு கூடுதல் புகழ்! காமன்வெல்த் போட்டிகளில் ஆடவருக்கான ஃப்ரீஸ்டைல் 97 கிலோ மல்யுத்தப் போட்டியில் தீபக் நெஹ்ரா வெண்கலப் பதக்கம் வென்றிருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. அசாதாரணமான துணிச்சலையும், உறுதித் தன்மையையும் தீபக் வெளிப்படுத்தியுள்ளார். அவரது எதிர்கால முயற்சிகளுக்கு என் வாழ்த்துகள். #Cheer4India

**********