Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆச்சாரியா கிருபாளினி பிறந்த நாளில் பிரதமர் அவரை நினைவு கூர்ந்தார்


இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் ஆச்சாரியா கிருபளானி ஆற்றிய பங்களிப்பிற்காக பிரதமர் திரு நரேந்திர மோடி அவரை நினைவு கூர்ந்தார். ஆச்சாரியா கிருபாளினியின் பிறந்த நாளான இன்று, நமது தேசத்திற்கான அவரது சிறந்த தொலைநோக்குப் பார்வை, மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு, சமூக அதிகாரம் ஆகியவற்றில் அவர் ஆற்றிய பங்களிப்புகளுக்காக பிரதமர் அவரைப் புகழ்ந்துரைந்தார்.

 

சுட்டுரை வாயிலாக பிரதமர் வெளியிட்டுள்ள செய்தியில் கூறியுள்ளதாவது:

 

காந்தியடிகளின் தலைமையிலான இந்தியாவின் சுதந்திரப் போராட்டத்தில் முன்னணியில் இருந்தவர் ஆச்சாரியா கிருபாளினி. அவர் நமது தேசத்தின் மீது சிறந்த தொலைநோக்கு பார்வையைக் கொண்டிருந்தார். ஒரு நாடாளுமன்ற உறுப்பினராகஅதை நிறைவேற்றுவதற்காகப் பாடுபட்டார். சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கும், சமூக அதிகாரமளித்தலுக்கும் அவர் மகத்தான பங்களிப்பைச் செய்தார். அவரது பிறந்த நாளான இன்று அன்னாரை நினைவு கூர்கிறேன்.

 

****