ஆசிரியர் தினத்தை முன்னிட்டு தேசிய விருதுகள் பெற்ற ஆசிரியர்களுடன் பிரதமர் திரு. நரேந்திர மோடி இன்று கலந்துரையாடினார்.
நாட்டின் கல்வியின் தரத்தை மேலும் மேம்படுத்துவது குறித்து தொடர்ந்து ஆசிரியர்கள் முயற்சிகள் மேற்கொள்ள வேண்டும் என்று அப்போது பிரதமர் கேட்டுக் கொண்டார்.
சமீபத்திய தொழில்நுட்பத்தை ஆசிரியர்கள் நன்கு தெரிந்து கொண்டு மாணவர்களுக்கு அதை சரியான முறையில் கற்றுக் கொடுக்க வேண்டும் என்றும் பிரதமர் கூறினார். மாணவர்களிடையே சிந்தனையை ஊக்குவிக்க வேண்டும் என்றும் ஆசிரியர்களை அவர் கேட்டுக் கொண்டார்.
தூய்மையை கடைப்பிடிக்க வேண்டியதன் அவசியத்தை ஆசிரியர்கள் மாணவர்களிடம் எடுத்துக் கூற வேண்டும் என்றும் பிரதமர் திரு. நரேந்திர மோடி அப்போது கூறினார்.
மத்திய மனிதவள மேம்பாட்டுத்துறை அமைச்சர் திருமதி ஸ்மிருதி இரானி மற்றும் அத்துறையின் இணை அமைச்சர் டாக்டர் ராம் சங்கர் கத்தேரியா ஆகியோர் இந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டனர்.
Met teachers who have been conferred National Awards. Our interaction was wonderful. http://t.co/wpuZbK7wjz
— Narendra Modi (@narendramodi) September 4, 2015
I congratulated all teachers conferred the National Awards for their determination & their invaluable service to our nation.
— Narendra Modi (@narendramodi) September 4, 2015