Search

பி.எம்.இந்தியாபி.எம்.இந்தியா

அண்மைச் செய்திகள்

பி.ஐ.பி.யில் இருந்து தானாகவே பெறப்பட்டது

ஆசிரியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில், செப்டம்பர் 7ம் தேதி பிரதமர் உரையாற்றுகிறார்


ஆசிரியர்கள் மாநாட்டின் தொடக்க விழாவில் பிரதமர் திரு நரேந்திர மோடி, 2021 செப்டம்பர் 7ம் தேதி காலை 11 மணிக்கு காணொலி காட்சி மூலம் உரையாற்றுகிறார்இந்நிகழ்ச்சியின்போது, கல்வித்துறையில், பல முக்கிய நடவடிக்கைகளை, அவர் தொடங்கி வைக்கிறார்

இந்திய சைகை மொழி அகராதி (உலகளாவிய கற்றல் வடிவமைக்கு ஏற்ப காது கேளாதோருக்கான ஆடியோ மற்றும் சைகை மொழியுடன் கூடிய வீடியோ),  பேசும் புத்தகங்கள் (பார்வையற்றவர்களுக்கான ஆடியோ புத்தகங்கள்) , சிபிஎஸ்இயின் பள்ளி தர உறுதி மற்றும் மதிப்பீட்டு கட்டமைப்பு, நிபுன் பாரத் மற்றும் வித்யாஞ்சலி இணையதளத்துக்கான (கல்வி தன்னார்வலர்கள்/ நன்கொடையாளர்கள்/சிஎஸ்ஆர் பங்களிப்பாளர்களுக்கு உதவுவதற்காக) நிதிஷிதா ஆசிரியர் பயிற்சித் திட்டம் ஆகியவற்றை பிரதமர் தொடங்கி வைக்கிறார்

ஆசிரியர் விழா-2021-ன் நோக்கம்,  “தரமான மற்றும் நிலையான பள்ளிகள்: இந்தியாவில் உள்ள பள்ளிகளிலிருந்து கற்றல்”  ஆகியவை ஆகும்இந்த விழா, அனைத்து மட்டத்திலும் கல்வி தொடர்வது மட்டும் அல்லாமல், நாடு முழுவதும் உள்ள பள்ளிகளில் அனைத்தும் உள்ளடங்கிய நடைமுறைகள் மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்ய புத்தாக்க நடைமுறைகளை ஊக்குவிக்கும்.

இந்நிகழ்ச்சியில் மத்திய கல்வி அமைச்சர் மற்றும் கல்வித்துறை இணையமைச்சர்கள் பங்கேற்பர்.

 

—–